Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 08, 2012

கடலூர் மாவட்டம் லால்புரத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்புரத்தில் உள்ள MRV நகரில் சுமார் 15 வருடங்களாக முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி முஸ்லிம்கள் தொழுவதற்கு பள்ளியோஅல்லது அவர்களின் பிள்ளைகள் குர்ஆன் ஓதுவதற்கு மதரசாவோ இப்பகுதியில் இல்லை.

   10 வருடங்களுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த சிறுமி சுமார் மூன்று கிலோ மீட்டார் தொலைவில் உள்ள சிதம்பரத்தில் உள்ள மதரசாவிற்கு செல்லும் போது பஸ்ஸில் அடிபட்டு இறந்தார். இதை கண்ட சைய்யது என்பவர் தன்னுடைய 8 சென்ட் இடத்தை இப்பகுதி மக்கள் மதரசா கட்டிக்கொள்ள 1998 ஆம் வருடம் தானமாக வழங்கினார்.மகிழ்ச்சியடைந்த இப்பகுதி மக்கள் அந்த இடத்தில் அரபு பாட சாலை (மதரசா) துவங்க முடிவு செய்து கட்டிடம் கட்டுவதற்கான பணியை 2001 ஆம் ஆண்டு துவங்கும் போது அப்பகுதியை சேர்ந்த காவி சிந்தனை உடைய ஒரு சிலர் முஸ்லிம்கள் இங்கு வாழவே கூடாது என்ற அடிபடையில், முஸ்லிம்கள் இங்கு சுடுகாடு (மையவாடி) அமைக்கபோகிறார்கள் என்ற பொய்யான விசமத்தனமான வதந்தியை அம்மக்களிடையே பரப்பி அதை போலீசிலும் புகாராக அளித்தனர்.

 போலீசார் சரிவர விசாரிக்காமல் மதரசா கட்டிட பணியை நிறுத்தினர்.இது குறித்து இப்பகுதி முஸ்லிம்கள் வட்டாச்சியர் மற்றும் கோட்டாச்சியர் ஆகியோரிடம் புகார் செய்தனர்.ஆனால் இப்பிரட்சனையை விசாரித்த வட்டாச்சியர்
காவி சிந்தனை உடையவர்களுக்கு ஆதரவாக 145 என்ற தடை உத்தரவு பிறப்பித்து இரு தரப்பும் அந்த இடத்திற்குள் செல்ல கூடாது என உத்தரவிட்டு முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தார். அதன்பின் முஸ்லிம்களை பயமுறுத்தும் வகையில் 145 உத்தரவு வருவதற்கு முன்னாள் செங்கல் வைத்து அடிக்கல் மட்டும் செய்த வேலையை 145 உத்தரவிற்கு பின் செய்ததாக கூறி வழக்கு பதிந்து 8 முஸ்லிம்களை சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது புறம் போக்கு இடம் அல்ல முஸ்லிம்களுக்கு சொந்தமான பட்டா இடம்தான் என 2004 ஆம் வருடம் தீர்பளித்தது.

மகிழ்ச்சியுற்ற முஸ்லிம்கள் மதரசா பணிகளை மீண்டும் தொடங்க முயலும் போது 145 உத்தரவை காட்டி தடைகளை ஏற்படுத்தி வந்தனர். இது சம்பந்தமாக 145 உத்தரவை விளக்கி கொள்ளுமாறு கோட்டாச்சியரிடம் மனு கொடுத்தனர் முஸ்லிம்கள், ஆனால் எந்த பதிலும் இல்லை.இந்நிலையில் கடலூர் வந்திருந்த மாநில சிறுபான்மை கமிசனை சந்தித்து நிலைமையை விளக்கினர் முஸ்லிம்கள். சிதம்பரம் வட்டாச்சியர் மற்றும் கோட்டாசியரிடம் ஏன் இது சம்பந்தமாக நடவடிக்கை இல்லை என சிறுபான்மை கமிஷன் கேட்டவுடன்,முஸ்லிம்களை தொடர்புகொண்ட வட்டாச்சியர் ஒரு வார காலத்தில் சரி செய்து விடுகிறோம் என கூறி பிறகு மதரசா கட்ட தடையில்லா சான்றிதலையும் 2010ஆம் ஆண்டு வழங்கினார். உடனே செயலில் இறங்கிய முஸ்லிம்கள் அப்பகுதி பஞ்சாயத்தை அணுகி மதரசா கட்டிடம் கட்ட பஞ்சாயத் அனுமதியும் பெற்றனர்.அதன் முதற் கட்டமாக 26. 03. 2012 அன்று மதரசா அமைக்க கீற்று கொட்டகை போட்டனர். இதை பார்த்த காவி சிந்தனை கொண்ட சிலர் போலீசில் புகார் செய்தனர். இரு தரப்பையும் அழைத்த போலீசார் 31. 03. 2012 அன்று சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

   இந்நிலையில் 28. 03 2012 அன்று பட்டபகலில் வழக்கறிஞர் கீதா தலைமையிலான பெண்கள் மதரசாவிர்காக அமைக்கப்பட்ட கீற்று கொட்டகையை கிழித்தெறிந்தனர். மதரசா கொட்டகை கிளித்தெரியபட்டும் அமைதி காத்த முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து காவல் துறையில் புகார் செய்தனர் விசாரிக்கிறோம் என வாயால் கூறி CSR கொடுக்காத உதவி ஆய்வாளர் வசந்த குமாரியிடம் புகாருக்கான CSR கேட்டனர் முஸ்லிம்கள், ஆனால் CSR தரவில்லை.முஸ்லிம்கள் புகார் அளித்தது தெரிந்தவுடன் வழக்கறிஞர் கீதா தலைமையில் வந்தவர்கள் முஸ்லிம்கள் மீது போலீசில் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்ட SI வசந்தகுமாரி உடனடியாக CSR கொடுத்துள்ளார்.சட்டத்தை மதிக்காமல் கலவரத்தை தூண்டும் வகையில் முஸ்லிம்கள் மதரசா கீற்றுகொட்டகையை அராஜகமாக கிழித்தெறிந்த கும்பல் கொடுக்கும் புகாருக்கு CSR வழங்கி உள்ளனர். சட்டத்தை மதித்து செயல்பட்டு முஸ்லிம்கள் கொடுத்த புகாருக்கு CSR இல்லை BJP யுடன் அந்த கும்பல் தொடர்பில் உள்ளதால் அவர்களுக்கு சாதகமாக போலீஸ் நடக்கிறது. எங்களுக்கும் முஸ்லிம் அமைப்புகள் உள்ளன அவர்களை வைத்து மேல் அதிகாரிகளிடம் பேசிகொள்கிறோம் என செய்தி வெளியிட்டவுடன் அதன் பிறகு CSR கொடுத்தனர். CSR க்கே இந்த நிலைமை என்றால் இந்த காவல்துறையின் விசாரணை எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது சொல்ல தேவை இல்லை.

 முஸ்லிம்கள் தரப்பில் மதரசா நிர்வாகி ரியாஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மூஸா ஆகியோர் சிதம்பரம் தாலுகா உதவி கண்காணிப்பாளர். ASP துறை அவர்களை சந்தித்து தங்களது நியாயமான விளக்கத்தை கொடுத்தனர்.அனைத்தையும் கேட்ட ASP "பிரட்சனை உள்ளதால் அந்த இடத்தில மதரசா கட்டகூடாது" என கூறினார். முஸ்லிம்களின் இடத்தில் மதரசா கட்ட கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என கூறி வெளியேறினர்.ASP அவர்களே இப்படி நியாயமற்று பேசியதால் ASP தலைமையில் நடக்கும் சமாதான பேச்சு வார்த்தையில் கலந்துகொள் முடியாது என்றும் RDO தலைமையில் சமாதான கூட்டம் நடத்தினால் வருகிறோம் என்றும் முஸ்லிம்கள் கூறியதால்,31. 03.2012 போலீசார் தலைமையில் நடக்க இருந்த சமாதான கூட்டம் ரத்தானது. 

   இந்நிலையில் 31.03.2012 அன்று கடலூர் சிதம்பரம் நெடுஞ்சாலையில் வழக்கறிஞர் கீதா தலைமையிலான சிலர் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் சாலை மறியல் செய்தனர். எக்காரணமும் இல்லாமல் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் அராஜகமாக சாலை மறியல் செய்யும் அந்த கும்பலிடம் போலீசார் மென்மையான போக்கையே கையாண்டனர். அதன்பின் RDO சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்த பின்பே சாலை மறியல் முடிந்தது. இதுபற்றி அந்த மதரசா கட்டுமான பனி பொறுப்பாளர் ரியாசுதீன் என்கிற பஞ்சு பாய் கூறுகையில்: "இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சுதந்திரம் கிடைத்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” காரணம் முஸ்லிம்கள் இடத்தில முஸ்லிம்களே மதரசா கட்ட முடியவில்லையே? இப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் எங்குபோய் தொழுவார்கள்? இங்கிருக்கும் முஸ்லிம் குழந்தைகள் தங்கள் மார்கத்தை எங்கு போய் கற்பது? என்று வேதனையோடு கூறினார்.

 இப்பகுதிக்கு மிக அருகில் உள்ள கிராம முன்னாள் தலைவர் வெற்றிவேல் கூறுகையில்: இப்பகுதியில் ஹிந்துக்களுக்கு கோவில் கட்ட அனுமதி உள்ளது, கிறிஸ்துவர்களுக்கு தேவாலயம் கட்ட அனுமதி உள்ளது ஆனால் முஸ்லிம்களுக்கு பள்ளி மதரசா கட்ட அனுமதி இல்லை எனபது வேதனையாக உள்ளது இதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை . இந்த மதரசாவை 10 வருடங்களுக்கு முன்பே கட்டி இருந்தால் ஒரு சில இலட்சத்தில்முடிந்திருக்கும். ஆனால் இப்போது உள்ள விலைவாசி உயர்வால் மதரசா கட்ட பல லட்சங்கள் செலவாகும். மதரசா கட்ட கூடாது என சொல்பவர்கள் மீது பொருளாதார நஷ்டஈடு வழக்கு தொடரவேன்டும் என கூறினார்.

 இதுபற்றி தற்போதைய லால்புரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தன் கூறுகையில்: 
 இப்பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இதை சகித்து கொள்ள முடியாத ஒரு சிலரின் காழ்புனர்ச்சியே இப்பிரட்சனைக்கு காரணம். இப்பகுதியில் முஸ்லிம்கள் மதரசா கட்ட என்னுடைய ஆதரவு எப்பவும் உண்டு என மனிதாபிமானத்தோடு கூறினார். .

சிதம்பரம் TNTJ நகர செயலாளர் இப்ராஹிம் கூறுகையில்: 
 இப்பகுதியில் முஸ்லிம்கள் சுடுகாடு அமைக்க போகிறார்கள் என்று சிலர் விசமதனத்தோடு பொய் பிரச்சாரம் செய்து பிரச்சனை செய்து வருகிறார்கள் அதோடு இல்லாமல் மதரசா கொட்டகையை கிழித்து எறிந்துள்ளனர் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கு இப்பகுதியில் மதரசா கட்ட அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும் இல்லையேல் முஸ்லிம்களின் உரிமையை மீட்டெடுக்க TNTJ களம் இறங்கும் என கூறினார். இப்பிரட்சனையில் TNTJ உடனடியாக தலையிட்டு மதரசா கட்டும் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பரவலாக கூறினார்கள்.
 இது குறித்து கடலூர் மாவட்ட TNTJ தலைவர் முத்துராஜா கூறுகையில்: முஸ்லிம்களின் உரிமைய்ப் பறிக்கும் கடலூர் மாவட்ட காவல்துறையும் மாவட்ட வருவாய்த் துறையையும் கண்டித்து முஸ்லிம் சமுதாயத்தை திரட்டி இம்மாதம் பதினான்காம் தேதி சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டனப் போராட்டத்தை நடத்த உள்ளோம். இதன்பின்னரும் நீதி கிடைக்கவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் இப்பிரச்சனையக் கொண்டு செல்ல மாநில தலைமைக்கு கோரிக்கை வைப்போம் என்று கூறினார். களத்தொகுப்பு - டி.முத்துராஜா நன்றி: உணர்வு வார இதழ் இன்ஷாஅல்லாஹ்! இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல்துறையும் மாவட்ட வருவாய்த் துறையையும் கண்டித்து வருகின்ற 14.04.2012 அன்று காலை 11.00 மணியளவில் சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் கடலூர் மாவட்டம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அநீதிக்கு எதிராக!! ஆர்ப்பரிக்க தயாராவோம்!! இதில் அனைத்து சகோதர, சகோதரிகளும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
நன்றி:உணர்வு 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...