Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 23, 2012

புனித திருக்குர்ஆன் பிரதி எரிப்பு: ஆப்கான் கொந்தளிக்கிறது – 5 பேர் பலி!

காபூல்:நேட்டோ ராணுவத்தினர் உலக மனித சமூகத்திற்கு நல்லுபதேசமாக திகழும் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆப்கானின் பல்வேறு பகுதிகளில் ஐந்து பேர் பலியானார்கள்.

போராட்டம் தொடரும் இரண்டாவது தினமான நேற்று காபூலில் அமெரிக்க கேம்ப் ஃபீனிக்ஸிற்கு செல்லும் ஹைவேயில் பொதுமக்கள் தடை ஏற்படுத்தினர். போலீசார் மீது கல்வீசி தாக்கிய மக்கள் கார்களின் கண்ணாடிகளை உடைத்தனர்.

காபூலில் அமெரிக்கா மற்றும் கர்ஸாய்க்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து வன்முறை உருவானது. காபூல், ஜலாலாபாத் ஆகிய இடங்களில் ஒருவர் வீதமும், பர்வான் மாகாணத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஆனால், போராட்டம் நடத்தியோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று போலீஸார் கூறுகின்றனர். ஆப்கானின் பெரும்பாலான இடங்களில் நடந்த போராட்டங்களில் தாலிபான் தலைவர் முல்லா உமருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேற்கு காபூலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்திய பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஜலாலாபாத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இங்கே உள்ள சாலையில் பொதுமக்கள் தீ வைத்தது மூலம் நகரம் ஸ்தம்பித்துள்ளது. தங்களது அதிகாரிகள் வெளியே இறங்க வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்த சம்பவத்திற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா மன்னிப்புக் கேட்டார். அமெரிக்க ராணுவ முகாமில் நடந்த சம்பவத்தை அமெரிக்க ராணுவத்தின் ஒட்டுமொத்த சம்பவமாக கருதக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், திருக்குர்ஆன் பிரதியை எரித்த சம்பவம் உறுதிச் செய்யப்படவில்லை என்றும், தாலிபான் கைதிகள் ரகசியத்தை பரிமாறும் புத்தகம் தான் எரிக்கப்பட்டது என்று கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பர்வானில் கின்வாரியில் ஒபாமா மற்றும் கர்ஸாயின் உருவபொம்மையை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எரித்தனர்.

‘அமெரிக்கா இஸ்லாத்தை அவமதித்துவிட்டது. நாங்கள் போராட்டத்திற்கு தயாராகிறோம்’ என்று 18 வயதான அஜ்மல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

பக்ராம் விமான தளத்தை மக்கள் தடை ஏற்படுத்தியுள்ளதால் ராணுவத்தினர் வெளியேற முடியவில்லை. நேட்டோ இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...