Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 05, 2012

சர்ச்சைக்குரிய விளம்பரம்: ஸாம்சங்கிற்கு ஈரான் எதிர்ப்பு

சியோல்:இஸ்ரேலி உளவாளிகள் ஈரானின் அணுசக்தி நிலையத்தை தகர்ப்பது போன்ற விளம்பரத்தை பரப்புரைச் செய்த தென்கொரியாவின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஸாம்சங்கிற்கு ஈரான் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஈரானில் ஸாம்சங்கின் தயாரிப்புகளுக்கு தடை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ஈரான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தொலைக்காட்சி சேனலான ‘ஹாட்’ டில் ஸாம் சங்கின் ‘கேலக்ஸி டேப்’ கம்ப்யூட்டர் தொடர்பாக வெளியான விளம்பரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேவேளையில் இவ்விளம்பரத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என ஸாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

ஈரான் அணுசக்தி நிலையம் போன்ற ஒரு கட்டிடத்திற்கு அருகே உள்ள ஒரு சிற்றுண்டி சாலையில் இருந்து கொண்டு இரண்டு மொஸாத் உளவாளிகள் நடத்தும் ஆபரேசன் இந்த விளம்பரத்தில் காட்சிகளாக உள்ளன. இதில் ஒருவர் தான் கையில் வைத்திருக்கும் ஸாம்சங்கின் ‘கேலக்ஸி டாபின்’ பொத்தான்களை அழுத்தும்போது சற்று தொலைவில் இருக்கும் அணுசக்தி நிலையம் வெடித்து சிதறுகிறது.
‘ஏன் இவ்வாறு செய்தாய்’ என அவனது தோழன் கேட்கும் போது, ‘ஈரானில் இன்னொரு மர்மமான குண்டுவெடிப்பு’ என பொத்தானை அழுத்தியவர் பதில் அளிக்கிறார். இந்த விளம்பரம் தங்களை அவமதித்துள்ளதாக ஈரான் அரசின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரான் ஒரு பலகீனமான நாடு. நாட்டில் எங்கேயும், எப்பொழுதும் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என்பது போன்று எண்ணும் வகையிலான இந்த விளம்பரத்தின் பொறுப்பு ஸாம்சங் நிறுவனத்திற்குதான் என அவர் கூறினார். ஆனால் இது, டி.வி சேனலின் கேலக்ஸி டாப் பரிசுத் திட்டத்தின் விளம்பரம் என்றும் தங்களுக்கு அதில் பங்கு இல்லை என்றும் ஸாம்சங் கூறுகிறது.

‘நாங்கள் அனைத்து மக்களின் கலாச்சாரத்தையும் மதிக்கிறோம்’ என ஸாம்சங் அதிகாரிகள் மேலும் கூறுகின்றனர்.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த அமெரிக்காவிடம் இருந்து நிர்பந்தத்தை சந்தித்து வருகிறது தென்கொரியா. தடையின் ஒரு பகுதியாக ஈரானின் நூற்றுக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களை தென்கொரியா கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...