Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 19, 2011

அக். 1ல் புதிய வாக்காளர் சேர்க்கும் பணி துவக்கம்:தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, திருத்தம் உள்ளிட்ட பணிகள், அக்.,1ல் துவங்குகின்றன.வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி முன்னேற்பாடுகள் குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தலைமை வகித்தார். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் விளக்கம் அளித்தார்.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி, அக்.,1ம் தேதி துவங்குகிறது. சேர்க்கை, திருத்தம், பெயர் நீக்கம் ஆகியவற்றுக்கு உரிய படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்து தர வேண்டும். வரும் ஜன.,1ம் தேதி, 18 வயது பூர்த்தியான அனைவரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள். சமீபத்திய தேர்தல்களில், இளைஞர்கள் அதிகம் பேர் ஓட்டளிக்க முன் வந்துள்ளனர். அதேபோல, வரவிருக்கும் வாக்காளர் சேர்க்கை பணியின்போது, அதிகப்படியான இளைஞர்கள், தங்களது பெயரை சேர்க்க முன் வருவர் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் மக்கள் தொகை ஆண்டுக்கு இரண்டு சதவீதம் அதிகரிக்கிறது. அதேபோல, வாக்காளர் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஒன்றரை முதல் இரண்டு சதவீதம் வரை அதிகரிக்கிறது.ஆண், பெண் வாக்காளர் விகிதம், தமிழகத்தில் சரியான அளவில் தான் இருக்கிறது. திருப்பூர் போன்ற, வேலைக்காக இடம் பெயரும் வாக்காளர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தான், ஆண், பெண் விகிதத்தில் வித்தியாசம் காணப்படுகிறது.இவ்வாறு, பிரவீன் குமார் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...