ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:31) கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கசில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கசின் பின்புறம் உள்ள திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.
அல்லாஹ்வின் மிகப் பெரிய கிருபையால் காலை 6:30 மணி முதலே ஆண்களும், பெண்களும் திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். அல்லாஹ் அக்பர் என்ற தக்பீர் ஒலி மட்டும் விண்ணை முட்டியது. 7.30 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் அமீரகத்திலிருந்து சென்றுள்ள மஹம்மது தாரிப் பித்ராவின் அவசியம் குறித்தும் மஹ்சரில் மனிதனின் நிலை மற்றும் பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் குத்பா பேருரை 50 நிமிடங்கள் நிகழ்த்தினார் . இறுதியாக மக்கள் அனைவரும் து ஆ செய்த வண்ணம் அவர் அவர்கள் பிரார்த்தனை செய்தனர் பின்பு மிக மகிழ்ச்சியுடன் களைந்து சென்றனர் .
செய்தி : அபு இஹாப் (துபாய்)