Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 05, 2012

விரைவில் செல்பேசி ரோமிங் கட்டணம் ரத்தாகிறது

புதுடெல்லி:செல்பேசி 'ரோமிங்' கட்டணம் விரைவில் ரத்தாகிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது செல்பேசிக்கு வரும் அழைப்புக்கு “ரோமிங்” கட்டணம் தற்போது வசூலிக்கப்படுகிறது. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ளும் போது இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய தொலைத் தொடர்புத் துறை திட்ட மிட்டுள்ளது. 2013 மார்ச் முதல் இதை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இது அமல்படுத்தப்பட்டால் ஒருவர் நாட்டில் எந்த பகுதிக்கு சென்றாலும் அவரது செல்போனில் வரும் அழைப்புக்கு கட்டணம் கிடையாது. அதே சமயம் அவர் வெளியூர் சென்று அங்கிருந்து மற்றொருவருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டால், அது உள்ளூர் அழைப்பாக கருதப்பட்டு அதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த திட்டம் அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வோருக்கு குறிப்பிட்ட அளவு செல்பேசி கட்டணம் குறையும். மேலும் எண்ணை மாற்றாமல் செல்பேசி சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்லும் திட்டம் (எம்.என்.பி) தொடர்பான கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது. தற்போது ஒருவர் தனது செல்போன் எண்ணை மாற்றாமல் வேறொரு செல்பேசி சேவை நிறுவனத்திற்கு மாறும் வசதி உள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் ஒரே வட்டத்திற்குள் உள்ள வேறொரு நிறுவனத்தின் செல்பேசி சேவைக்கு மட்டுமே மாற முடியும். வேறொரு வட்டத்தில் உள்ள செல்பேசி சேவை நிறுவனத்திற்கு மாற முடியாது.

இத்திட்டம் அமுலுக்கு வந்தால் நாட்டின் எந்த பகுதிக்கு மாறினாலும் ஒரே செல்பேசி எண்ணில்
அப்பகுதியில் உள்ள வேறொரு செல்பேசி நிறுவனத்தினர் சேவையை பெறலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...