Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 24, 2012

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி டெல்டா விவசாயிகளுக்கு டீசல் மானியம்

கடலூர்: காவிரி டெல்டா சம்பா சாகுபடி விவசாயிகள் டீசல் மானியம் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா பகுதியில் சம்பா நெல்சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு தொகுப்பு திட்டமானது தற்போது கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள டெல்டா பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வரால் டெல்டா பாசன நெல் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கூடுதல் சிறப்பு தொகுப்பு திட்டத்தையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்டா சம்பா நெல்சாகுபடி விவசாயிகள் பாசனத்திற்காக டீசல் பம்ப் உபயோகப்படுத்தினால் டீசலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. ஏக்கருக்கு ரூ.600 வீதம் அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் பரப்பளவிற்கு ரூ. 3 ஆயிரம் மானியமாக வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்படும். எனவே டீசல் பம்ப் செட்டினை சொந்தமாகவோ அல்லது வாடகையாகவோ பயன்படுத்தி பாசனம் செய்யலாம். எனவே டீசல் பம்ப் மூலம் பாசனம் மேற்கொள்ளும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள டெல்டா நெல் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைத்துறை
அலுவலகத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
-Dinakaran 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...