Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 15, 2012

அரபு நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர நடவடிக்கை-வயலார் ரவி

அரபு நாடுகளில் போதிய ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மேல் சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக பதிலளித்த வயலார் ரவி கூறியதாவது:- அய்க்கிய அரபு நாடுகளை சேர்ந்த குடியுரிமை துறை அதிகாரிகளின் பொது மன்னிப்பு முகாமையொட்டி, அங்கு விசா காலாவதியான பிறகும் தங்கியுள்ள இந்தியர்களின் விசாவை நீட்டிக்கவும், புது விசா பெறவும், தாய்நாட்டுக்கு வர விரும்புவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர அந்நாடுகளின் குடியுரிமை அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அங்கு வசிக்கும் இந்தியர்களை நீண்ட நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சம்பளமும் சரியாக தரப்படுவதில்லை. வசிப்பிட வசதிகள் சரியில்லை என இந்திய தொழிலாளிகள் தொடர்ந்து தூதரகங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

 குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இதைப் போன்ற 3,087 புகார்களும், சவுதி அரேபியாவில் 2,547 புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஓமனில் 2,183, பக்ரைனில் 812, அபுதாபியில் உள்ள தூதரகத்தில் 491 புகார்கள் இந்தியர்களால் தூதரக அதிகாரிகளிடம்
கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் குறித்து அரபு நாட்டு அதிகாரிகளுடன், இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவரது பதிலில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...