Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 12, 2012

காட்டுமன்னார்கோவிலில் மணிலா பயிரிட விவசாயிகள் ஆர்வம்

காட்டுமன்னார்கோவில், -: காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகளே வசித்து வருகின்றனர். இங்குள்ள வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவை மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நடவு செய்யப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாய பணிகளுக்காக வாங்கிய கடன்களை செலுத்த முடியுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகே குறைந்த அளவே உள்ள புன்செய் நிலத்தில் மணிலா சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு 40 கிலோ மூட்டை விதை மணிலாவை ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கி பயிர் செய்தனர். கடந்த ஆண்டு பயிர்செய்த மணிலா பயிர்கள் தானே புயலால் சேதம் அடைந்தது. இதன் காரணமாக மணிலா பயிர் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது ரூ.4 ஆயிரத்துக்கு மணிலா விதை வாங்கி விவசாயிகள் விதைப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர். வாடகைக்கு தண்ணீர் இறைத்தாவது மணிலா பயிரை காப்பாற்றி நெற்பயிருக்கு வாங்கிய கடனை அடைக்கலாம் என்ற எண்ணத்தில் விவசாயிகள்
பணியில் ஈடுபட்டுள்ளனர். கால் காணி நிலப்பகுதிக்கு சுமார் 20 ஆயிரம் வரை செலவாகும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
-DINAKARAN

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...