Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 30, 2012

சிதம்பரத்தில் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி!

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் சிறுவர்களுக்கான பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் "சிடி' மற்றும் "டிவிடி'க்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கண்காட்சியில் 20 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் எழுத்துருக்கள் மல்டி மீடிய "சிடி', குழந்தைகளுக்கான "சிடி', பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களுக்கான "சிடி'க்கள், மொபைல் மற்றும் மடிகணினிகளில் தமிழைப் பயன்படுத்தும் மென்பொருள்கள் அச்சு வடிவமைப்பு, முன்னணி பத்திரிகை நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழ் யூனிகோடு எழுத்துருக்கள், தமிழ் 99 விசைப்படகுகள், விக்கிபீடியா இணைய பக்க வடிவமைப்புகள், கைபேடு மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற பல கணினி கருவிகளில் மென்பொருள்கள் காட்சியில் இடம் பெற்றிருந்தன. முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சமச்சீர் கல்வி "டிவிடி', ஸ்போக்கன் இங்கிலீஷ், இலக்கணம், பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் "சிடி' மற்றும் "டிவிடி'க்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் வினா வங்கி, லேர்ன் சப்ஜெக்ட் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு "சிடி'க்கள், கணி திறன் அறிய ஒளிப்பியார்டுகளில் ஏதுவான "சிடி'க்களும் 20 சதவீத தள்ளுபடி விலையில் கண்காட்சியில் விற்பனை செய்தனர்.

 இதுதவிர குழந்தைகள், நர்சரி பாடல்கள், நல்லொழுக்கக் கதைகள், வரலாற்று நூல்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன. பொன் தமிழ் மென்பொருள்கள், பொன்மடல் ஒன்பது விசைகளிலேயே விரைவாக தமிழில் தட்டச்சு "கே 12' முறையில் 10 நிமிடங்களில் கற்றுக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல், டேப்லட், கணிபொறிகளில் விரல், குச்சி, மவுஸ் போன்றவற்றால் கையினால் எழுதி தமிழில் உள்ளடக்கலாம். "தமிழ் 99', "கே 12' தட்டச்சு ஆங்கிலம் (ஒலிமாற்றம்) ஹைபோன், ஹைபேடு முதலியவற்றில் கையினால் எழுதி உள்ளடக்குவதோடு குறுஞ்செய்தி, ஈமெயில், கோகுல், பேஸ்புக் போன்றவற்றிக்கு எழுதி நேரடியாக அனுப்பும் மென்பொருளும் கண்காட்சியில் இடம் பெற்றன. கையடக்க சிபேர்டு கண்காட்சியில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்த விஷயங்கள் நம் உள்ளங்கையில் அடக்கிவிடும் வகையில் மானிட்டர் கீ போர்டு, நான்கு யுஎஸ்பி., லேர்ன் போர்டு
அடங்கியுள்ளன.

கண்காட்சியில் "தினமலர் டாட் காம்' "தினமலர்' நாளிதழ் சார்பில் கண்காட்சியில் இணைய தளம் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி தொடர்பான செய்திகள், மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் உள்ளிட்ட பல கல்வித் தகவல்களை "கல்வி மலர்' இணையதளம் வழங்குகிறது. மாநில மற்றும் மத்திய, நிகர்நிலை பல்கலைக் கழங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் பற்றி விரிவான விவரங்கள் இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல், மருத்துவம், கால்நடை, கலை அறிவியியல், சட்டம் உட்பட அனைத்துத் துறை சார்ந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக ஆராய வேண்டிய விவரங்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அது தொடர்பான ஆலோசனைகள் இந்த இணைய தள அரங்கில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொண்டனர். இதுதவிர நாட்டு நடப்புகள், உடனுக்குடன் செய்தி, தேர்வு முடிவுகள் மற்ற இணைய தளத்திற்கு முன்னோடியாக செயல்பட்டு வருவதை பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், தமிழ் இணைய கல்விக் கழகம், விஷூவல் மீடியா, டெக்லாஜிசிஸ் உட்பட பல மென்பொருள் நிறுவனங்கள் கண்காட்சியில் குறைந்த விலையில் விற்பனை செய்தது பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது.
-source:Dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...