Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 14, 2010

அரப் லீக்கை வலுப்படுத்த வேண்டும் - சவூதி அரேபியா


ஜித்தா,அக்.13:மேற்காசியா மற்றும் சர்வதேச பிரச்சனைகளில் பயன்தரத்தக்க வகையில் தலையிடுவதற்கு அரப் லீக்கை இன்னும் கூடுதலாக வலுப்படுத்த வேண்டும் என சவூதிஅரேபியா அமைச்சரவை அழைப்பு விடுத்துள்ளது.

அரப் நாடுகள் தங்களிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டுமெனவும் சவூதி அமைச்சரவை கோரிக்கை விடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ் இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமைத் தாங்கினார். அரப் லீக் அங்கீகரிக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளும், தீர்மானங்களும் நடைமுறைப்படுத்த எல்லா அரப் நாடுகளும் தயாராகவேண்டும். இவ்விஷயத்தில் உயர்ந்த நம்பிக்கையும், மதிப்பையும் உறுப்பு நாடுகள் காண்பிக்க வேண்டும் என சவூதி அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது.

லிபியாவில் நடந்த அரப் லீக் உச்சிமாநாட்டின் தீர்மானங்களை மதிப்பீடுச் செய்தபிறகு சவூதி அமைச்சரவை இக்கருத்தை வெளியிட்டுள்ளது.

25க்கும் குறைவான பயணிகளைக் கொண்ட வாகனங்கள் புண்ணியஸ் தலங்களான மக்கா, மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் நுழைவதற்கு சவூதி அமைச்சரவை தடை ஏற்படுத்தியுள்ளது.

துல்கஃதா 15 முதல் துல்ஹஜ் 13 வரை இந்த தடை நீடிக்கும். அதேவேளையில், அரசு உரிமம் பெற்ற வாகனங்களுக்கு இந்த தடை செல்லாது. சட்டத்தை மீறுபவர்களை விசாவை ரத்துச்செய்து சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்புதல் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படும். கைப்பற்றப்படும் வாகனங்கள் துல்ஹஜ் 12க்கு பிறகே திரும்ப அளிக்கப்படும். இவ்வாறு சவூதி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Source:பாலைவனதூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...