Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 11, 2010

நண்டுகளால் `டிராபிக் ஜாம்’


சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட `டிராபிக் ஜாம்’ உலக சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. இதைவிட வினோதமாக, நண்டு விளையாட்டால் மாதக் கணக்கில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது தைவான் நாட்டில். அங்குள்ள கென்டிங் தேசிய பூங்கா அருகே ஒரு கடற்கரை உள்ளது. அதையொட்டி பிரதான கடற்கரை சாலையும் செல்கிறது. தற்போது நண்டுகளின் இனபெருக்க காலமாகும்.

அதனால் 40 வகையான நண்டு இனங்கள் தங்கள் இனபெருக்க வேலையில் இறங்கி உள்ளன। நண்டுகள் நடுரோட்டில் நின்றுகொண்டு `நண்டூறுது, நரியூறுது’ விளையாட்டில் ஈடுபடுகின்றன. கடற்கரையில் நண்டுகள் விளையாடினால் ரசிக்கும் மனிதர்கள், நடுரோட்டில் நண்டுகளை பார்த்ததும் எரிச்சலாகிவிடுகிறார்கள். ஒன்று, இரண்டல்ல சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான நண்டுகள் லீலை செய்கின்றன. குஞ்சுகளை அழைத்து வலம் வருகின்றன.

அவைகளும் ஒருவித சததத்தை எழுப்புவதாக வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள்। அவசர கோலத்தில் வரும் வாகனங்கள் ஏராளமான நண்டுகளை அடித்து நசுக்கிவிட்டு செல்கின்றன. ஆனால் பெரும்பாலான வாகன ஒட்டிகள் பொறுபானவர்களாக இருபதால், நண்டுகள் நகர்ந்து செல்லும் வரை தங்கள் வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள்.

இதனால் `டிராபிக் ஜாம்’ ஏற்படுகிறது. `நண்டு இனபெருக்க சீசன் ஆரம்பித்து ஒரு வார காலத்திற்கும் இந்த நிலை என்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு என்ன நிலைமையோ’ என்று புலம்புகிறார்கள், டிரைவர்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...