Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 27, 2010

காஷ்மீர் விசா கொள்கையில் மாற்றமில்லை: சீனா திட்டவட்டம்

காஷ்மீர் மக்களுக்கு தனி காகிதத்தில் "பேப்பர் விசா" வழங்கும் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்களுக்கு சீனா பிரத்யேகமாக "பேப்பர் விசா" வழங்கி வருகிறது.இது குறித்து சீனாவிடம் பலமுறை அதிருப்தி வெளியிட்டிருந்த இந்தியா, ஜம்மு காஷ்மீரை தனி நாடு போல சித்தரிக்கும் இந்த போக்கை கைவிட்டு, தங்களது உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கோரியிருந்தது.ஆனால் அதை சீனா தொடர்ந்து ஏற்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், இவ்வார இறுதியில் வியட்நாமில் நடக்கும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின்போது சீனப் பிரதமர் வென் ஜியாபோவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்களுக்கு சீனா பிரத்யேகமாக "பேப்பர் விசா" வழங்கி வரும் பிரச்னை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீன அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் ஜாவோசுவிடம் இது குறித்து கேட்டபோது, "இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்பில் இருக்கிறோம்" என்று மட்டுமே கூறினார்.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பை உறுதிப்படுத்த மறுத்த அவர், "சரியான நேரத்தில் உரிய தகவல் வரும்" என்று மட்டும் கூறினார்.

மேலும் இந்தியர்களுக்கு விசா வழங்கும் சீனாவின் கொள்கை நிலையானதாகவும், மாற்றமில்லாமலும் இருப்பதாகவும், காஷ்மீர் மக்களுக்கு தனி காகிதத்தில் "பேப்பர் விசா" வழங்கும் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்க இருக்கும் நிலையில், சீன அரசின் இந்தக் கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...