அபுதாபி,நவ:ஒப்பந்தம் காலவதியானால் புதிய வேலையை தேடுவதற்கு அனுமதியளிப்பதுக் குறித்து யு.ஏ.இ தொழில் அமைச்சகம் உடனடியாக முடிவெடுக்கும் என ஃபெடரல் நேசனல் கவுன்சிலின் தொழில் அமைச்சர் ஸகர் கோபாஷ் சஈத் கோபாஷ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஸ்பான்சர்ஷிப் முறையில் சில எதிரான அம்சங்கள் குறித்து பரிசீலிப்பது தொழில் அமைச்சகத்தின் புதிய முடிவென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராஸ் அல் கைமாவின் பிரதிநிதி யூசுஃப் உபைத் அலி அல் நுஐமியின் கேள்விக்கு பதிலளிக்கவே இதனை தெரிவித்தார் அமைச்சர்.
தொழிலாளர்களுக்கு சுதந்திரமாக வேலையை மாற்றுவதற்கான வசதியை ஏற்படுத்தவும் ஸ்பான்சர்ஷிப் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் நுஐமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
நவம்பர் 11, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...