விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்கள் மூலம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திவரும் கொடூரங்கள் , மனித உரிமை மீறல்கள், அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளுடன் நடத்திய ராஜாங்கரீதியான பேச்சுவார்த்தைகள், தனிப்பட்ட நபர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் ரகசிய விபரங்கள் மேலும் பல அதி முக்கிய ரகசியங்கள் அம்பலமாகியுள்ளன.
அமெரிக்கா நடத்திய ரகசிய உரையாடல்களின் விபரங்களை வெளியிட்டால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். மேலும் இது பல முக்கிய நபர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறும் என அமெரிக்க வெளியுறவுத்துறை கருதியதால் இந்த ஆவணங்களை வெளியிடாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கியது. இருப்பினும் அமெரிக்காவின் இந்த திட்டம் பலனளிக்கவில்லை.
ஹிலாரி கிளிண்டன் ஐக்கிய நாட்டுத் தலைவர்களை உளவு பார்த்ததில் தொடங்கி பிரிட்டனின் முக்கியஸ்தர்களான இளவரசர் ஆண்ட்ரீயூ , டேவிட் கேமரூன் , கார்டன் பிரவுன் ஆகியோரின் தலைகளும் இதில் உருள ஆரம்பித்துள்ளன. முக்கியமாக கார்டன் பிரவுனை பெண்கள் விடயத்தில் " வேட்டை நாய் " என இந்த ஆவணங்கள் வருணித்துள்ளன.
அமெரிக்க ராஜிய தூதர்கள் மூலமாக பான் கி மூன் உட்பட ஐக்கிய நாடுகளின் முக்கிய தலைவர்களை ஹிலாரி கிளிண்டன் வேவு பார்க்கச் சொன்னது, அவர்களின் கிரெடிட் கார்டு விபரங்கள் , விரல் ரேகைகள், டி.என்.ஏ ஆகியவற்றை சேகரித்த தகவல்கள் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.
மேலும் பிற நாடுகளின் தூதர்கள் பயன்படுத்தும் கணினி, தொலைத்தொடர்பு விபரங்கள் அவற்றின் கடவுச் சொற்களையும் அறிவதில் ஹிலாரி கிளண்டன் முனைப்புடன் செயல்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது. முக்கியமாக ஆப்கானிஸ்தான்/பாகிஸ்தான், ஈரான் மற்றும் வட கொரியா விடயங்களில் ஐக்கிய நாடுகள் தலைமை என்ன முடிவுகள் எடுக்கிறது.
எந்த பிரச்சினைகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதையும் முழுவதுமாக அமெரிக்கா உளவு பார்த்ததும் இந்த ஆவணங்களின் மூலம் வெளிப்பட்டுள்ளது. மேலும் இளவரசர் ஆண்ட்ரீயு, டேவிட் கேமரூன் , ஜார்ஜ் ஆஸ்போர்ன் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் குறித்த அமெரிக்க ராஜாங்க தூதுவர்களின் விமர்சனங்களும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
source:CNN
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...