Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 07, 2010

விமானத்தின் வால் பகுதியில் இருந்து திகில் பயணம் செய்த பெண்!

ரஷ்யாவில் இருந்து சைபீரியா நோக்கிச் செல்லும் ஒரு விமானத்தில் தரையிறக்கப் பயன்படுத்தப்படும் கியர் பகுதியில்(Landing gear area) மறைந்திருந்து பயணம் செய்துள்ளார் ஒரு டீன் ஏஜ் வயதுப் பெண்.
இந்த விமானப் பயண நேரம் சுமார் 50 நிமிடங்களாகும். இவர் ஒரு பராமரிப்பு நிலையத்திலிருந்து தப்பி வந்து ஒரு கடையில் சில பொருள்களைத் திருடிக்கொண்டு பின்னர் விமானத்தில் ஏறி பதுங்கியுள்ளார். இந்த விமானம் அன்டனோவ் 24 ரகத்தைச் சேர்ந்தது.

ஒரு மெல்லிய கோர்ட் மட்டுமே இந்த யுவதி அணிந்திருந்தார். எவ்வாறாயினும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

இவ்வருட முற்பகுதியில் வியன்னாவிலிருந்து லண்டன் செல்லும் ஒரு விமானத்திலும் இதே போன்று 20 வயதான ஒருவர் மறைந்திருந்து பயணம் செய்தார்.

2007ல் ரஷ்யாவின் ஊரல் மலைத்தொடருக்கு மேலாக மொஸ்கோ நோக்கிப் பயணித்த விமானத்திலும் ஒருவர் இதேபோல் பயணம் செய்துள்ளார்.

ஆனால் அவர் பயண முடிவில் நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...