நவம்பர் 15, 2010
ஆடு வங்கி; உலகின் முதன் முறையாக
கடன் வழங்கவும்,சேமிப்புக்களை மேற்கொள்ளவும் பணத்துக்குப் பதிலாக ஆடுகளைப் பயன்படுத்தும் வகையில் இந்தியாவில் ஒரு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அலஹாபாத்திலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கொரவான் என்ற இடத்தில் பெண்கள் ஒன்றிணைந்து இந்த வங்கிமுறையைத் தோற்றுவித்துள்ளதாக P.T.I செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
பிரேமா என்ற பெண்ணும் அவரது தோழிகளும் இணைந்து பிரத்தியேகமாக ஆடுகளைக் கொண்டு செயற்படும் இந்த வங்கிமுறையைத் தோற்றுவித்துள்ளனர். ஆடுகளை வளர்ப்பதில் முழுநேரம் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு நாம் அவற்றை கடனாக வழங்குகின்றோம்.
அந்த ஆடுகள் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈன்றதும் அதில் ஒன்றை அவர்கள் வைப்பாகத் திருப்பித் தர வேண்டும். ஆடுகள் அனைத்தும் வாராவாரம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
ஒரு ஆடு இறந்து விட்டால் சந்தையில் கிடைக்கும் ஆடொன்றின் மூலம் அல்லது வங்கியில் உள்ள ஒன்றின் மூலம் நிலைமையைப் பொறுத்து மாற்றீடு செய்யப்படும். எமது வங்கியிலுள்ள ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் தமது மூலதனமாக இருபது ஆடுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
அது அவர்களின் சுயநிதித் தேவைப் பூர்த்திக்குப் போதுமானதாகும். இதுவே எமது திட்டத்தின் நோக்கம் என்று பிரேமா விளக்கமளித்துள்ளார்.
செய்தி:CNN
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...