டர்பன், நவ. 9-
சிறு நீரில் அளவுக்கு அதிகமான நைட்ரேட்ஸ், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன.
இவற்றை கொண்டு தரமான உரம் தயாரிக்க முடியும். அதன் அடிப்படையில் அங்கு சிறுநீர் விலைக்கு வாங்கப்படுகிறது. இதற்காக அங்குள்ள வீட்டு தோட்டங்களில் 90 ஆயிரம் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு சிறுநீர் மட்டுமே கழிக்க வேண்டும். அதனுடன் ஒரு சொட்டு தண்ணீர் கூட சேர்க்க கூடாது. மேலும் சிறுநீரை பிடிக்க கழிப்பறையுடன் 20 லிட்டர் கொள்ளளவு உடைய கேன்கள் மற்றும் கண் டெய்னர்கள் பொருத்தப்பட்டுள்ளன.நகராட்சியின் துப்புரவு பணியாளர் வாரம் ஒருமுறை இங்கு வந்து சிறுநீரை எடுத்து செல்வார். இதன் மூலம் வாரத்துக்கு ரூ. 200 வீதம் ஒரு குடும்பத்தினர் சம்பாதிக்க முடியும். டர்பன் நகரை பொறுத்தவரை இத்தொகை மிகவும் அதிகமாகும். ஏனெனில் இங்குள்ள 43 சதவீத குடும்பத்தினர் நாள் ஒன்றுக்கு ரூ. 100 வீதமே சம்பாதிக்கின்றனர்.
எனவே சிலர் இந்த திட்டத்தை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் இதை விரும்பவில்லை. ஏனெனில் உடலில் இருந்து வெளியாகும் கழிவு பொருட்கள் ஒதுக்கப்படக் கூடியது. எனவே அவற்றை ஒதுக்கி தள்ள வேண்டும் என கூறியுள்ளனர்
source:maalaimalar.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...