சட்ட மேலவையின் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப்படுகிறது.
15 நாட்களுக்குள் பெயர் திருத்தம், புதிதாக பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமேலவைக்கான உறுப்பினர்களின் தலா 7 பேரை பட்டதாரி, ஆசிரியர்கள் வாக்களித்து தேர்வு செய்யலாம். இதற்காக தொகுதிகள் பிரிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 3 லட்சம் பட்டதாரிகளும், 72 ஆயிரம் ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் முடிந்து மாநிலம் முழுவதும் இன்று சட்ட மேலவைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் அலுவகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர், புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் அதற்குரிய படிவங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும், புதிய பெயர் சேர்க்கவும் டிசம்பர் 7ஆம் தேதி கடைசி நாளாகும். இதனையடுத்து டிசம்பர் 29ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறத.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம் பெற
இங்கே கிளிக் செய்யவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...