Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 02, 2010

கொள்ளுமேட்டில் நவம்பர் 1-ம் தேதி முதல் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பவர் கட்!!!

சிதம்பரம் கோட்ட மின்வாரியத்துக்குட்பட்ட பகுதிகளில் நவம்பர் 1-ம் தேதி திங்கள்கிழமை முதல் கீழ்கண்ட விவரப்படி 2 மணி நேரம் மின்நிறுத்தம் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் துணைமின்நிலையம் பகுதிகள்:நடராஜா மின்னூட்டி மூலம் மின்சாரம் பெறும் பகுதிகள்- காலை 6 மணி முதல் 8 மணி வரை, டூரிசம் மின்னூட்டி மூலம் மின்சாரம் பெறும் பகுதிகள்- காலை 10 மணி முதல் 12 மணி வரை, அண்ணாமலைநகர், மாரியப்பாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, அம்மாபேட்டை, மணலூர், வண்டிகேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்- மாலை 4 மணி முதல் 6 மணி வரை.
காட்டுமன்னார்கோவில்,துணைமின்நிலையம் பகுதிகள்: காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்- காலை 6 மணி முதல் 8 மணி வரை.

பு.முட்லூர் துணை மின்நிலையம் பகுதிகள்: புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, ஸ்ரீமுஷ்ணம் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, சேத்தியாத்தோப்பு,கொள்ளுமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 12 மணி முதல் 2 மணி வரை.

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் திங்கள்கிழமை (நவம்பர் 1-ம் தேதி) முதல் மின்நிறுத்த நேரம் மாற்றப்படும் என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செயற்பொறியாளர் சிவராஜ் தெரிவித்தது: விருத்தாசலம் நகர எல்லைக்குட்பட்ட கடலூர் சாலை, சிதம்பரம் சாலை, பூதாமூர், ஜங்சன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், கடைவீதி, சேலம் சாலை, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என்றும், நகரின் மற்ற பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
Source>Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...