Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 03, 2010

சாரட் வண்டியில் சந்தனக்கூடு : ஏர்வாடியில் கோலாகலம்




அல்லாஹ் கூறுகிறான்: -…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நடந்த சந்தனக்கூடு விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு விழா, 1744ம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த அக்., 9ல் மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தைக்காவிலிருந்து, குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. தாரை, தப்பட்டை முழங்க, பெண்கள் குலவையிட, ஏர்வாடி முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம், நேற்று அதிகாலை 4.50 மணிக்கு தர்கா வந்தடைந்தது. அப்போது, அங்கு கூடியிருந்த அனைத்து சமூகத்தினரும் பூக்களை தூவி வரவேற்றனர். தர்காவை மூன்று முறை வலம் வந்த பின், தர்கா வாசலில் பக்தர்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டது. பின், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்று, பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இந்து மதத்தினரே கடந்த 265 ஆண்டுகளாக சந்தனக்கூட்டைதோளில் சுமந்தபடி தர்கா கொண்டு வருகின்றனர். ஆனால், இம்முறை அவர்களின் வேண்டுகோள்படி, சாரட் வண்டியில் ஊர்வலமாக கொண்டு வர தர்கா கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன’ என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக ‘நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்’ என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?’ (அல்-குர்ஆன் 6:50)

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடை யோன். (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. அல்குரான் (1 - 7)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...