நவம்பர் 30, 2010
தொடர் மழையால் கிராம அடுத்த பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் பாதிப்பு
தண்ணீரால் சூழப்பட்ட நெடுன்சேரி - சிதம்பரம் சாலை
தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக பாழாகியுள்ளது. தண்ணீர் சூழ்ந்த நகர் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளில் தண்ணீர் வடியாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சிதம்பரத்தில் தாழ்வாக உள்ள 20க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள், கிராமப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி வளாகங்கள், போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
தற்போது மழை விட்டுள்ள நிலையிலும் தேங்கிய தண்ணீர் வடிந்தபாடில்லை. கொள்ளிடக்கரை பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு வயல்கள் மற்றும் சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, புவனகிரி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சிதம்பரம் நகரில் சாலைகள் குண்டும், குழியுமாக வீணாகியுள்ளது. சிதம்பரம் வழியாக அமைக்கப்படும் புறவழிச்சாலையில் தண்ணீர் வடிவதற்கு போதுமான வடிகால் வசதி செய்யப்படாததால் தண்ணீர் வடியாமல் கடல்போல் தேங்கியுள்ளது. விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீர் பிடித்துள் ளது. கீரப்பாளையம், குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
படங்கள்:அஹ்மத் &நஸ்ருல்லாஹ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...