Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 08, 2010

இந்திய இறையான்மையை கேள்விக்குறியாக்கிய ஒபாமாவின் வருகை.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமானம் செய்ததிலிருந்து இந்தியா வருவது இதுதான் முதல் தடவை.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பலத்த ஆயுத பொருளாதார போட்டி நடந்து கொண்டிருக்கும் இவ்வேலையில் அமெரிக்க அதிபர் இந்தியா வந்துள்ளது பல கேள்விகளை உண்டாக்கியுள்ளது.

சினாவின் பொருளாதார ஆயுத வளர்ச்சிகளை முடக்குவதற்கு இந்தியாவை அமெரிக்கா பயண்படுத்துகிறதா என்ற கேள்வியும் இதில் எழுந்துள்ளது.

ஒபாமாவின் வருகையும் செலவுகளும்.
ஒபாமாவின் இந்திய வருகைக்காக அமெரிக்க அரசு நாளொன்றுக்கு 900ம் கோடி செலவு செய்கிறது.

ஒபாமா வருகைக்கு முன்பே அமெரிக்க பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஆயுதம் தாங்கிய கப்பல் போன்றவற்றுடன் இந்தியா வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.

இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய அமெரிக்க பாதுகாப்பு.
ஒபாமாவின் வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
உலகின் பலம் மிக்க இராணுவத்தை வைத்திருக்கும் நாடுகளில் முக்கியமானதாக கருதப் படும் இந்திய இராணுவத்தின் நம்பிக்கைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க இராணுவமே ஒபாமாவின் பாதுகாப்பிற்கு முழுப் பொருப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதாவது 40 விமானங்கள் 6 ஆயுதம் தாங்கிய கார்கள் உட்பட அமெரிக்க உளவுப் பிரிவு சார்பாக மும்மை டெல்லி ஆகிய நகரங்களில் இரண்டு இராணுவ முகாம்களும் அமைக்கப் பட்டுள்ளன.

இந்தியாவிற்குள் ஒபாமா செல்லும் ஒவ்வொரு இடத்தையும் அமெரிக்க உளவுப் பிரிவு உன்னிப்பாக கண்காணிக்கும்.

ஓபாமா மற்றும் அவருடைய மனைவி செல்வதற்காக மூன்று அதி நவீன கடற்படை ஹெலிகாப்டர்களும் வடிவமைக்கப் பட்டுள்ளன.அத்துடன் 30 மோப்ப நாய்களும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
அதிபர் ஒபாமா இந்தியாவில் தங்கும் நாட்களில் மொத்தமாக 3000ம் அமெரிக்க படையினரும் தங்குகின்றனர்.

ஒபாமா வந்திறங்கிய விமானம் தரையிரங்கிய போது அரை மணிநேரம் மும்பை விமான நிலையம் மூடப் பட்டது.இது தவிர கொலாபாவில் உள்ள சிகாரா ஹெலிகாப்டர் தளத்தையும் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

அதி நவீன கார்.
அமெரிக்க அதிபர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது செல்வதற்காக அமெரிக்காவில் இருந்து 7000ம் கிலோ எடையுள்ள அதிநவீன கார் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிபர் மாத்திரம் பயணிப்பதற்காக பிரத்தியேகமாக செய்யப் பட்ட இந்தக் காரை ஜனரல் மோட்டர்ஸ் நிருவனம் வடிவமைத்துள்ளது.
இந்தக் காருக்கு காட்லாக் ஒன் என்று பெயரிப்பட்டுள்ளது.

இரசாயனத் தாக்குதல் தற்கொலைத் தாக்குதல் வெடி குண்டுத் தாக்குதல் துப்பாக்கிச் சூடு என எந்த ஒரு தாக்குதல் நடத்தப் பட்டாலும் இதற்கு எந்தச் சேதமும் ஏற்படாமல் இருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.
அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடலாம்.

காரின் மேற்புறத்தில் இராணுவ தரத்திலான பாதுகாப்பு ஸ்டீல் கவசங்கள் பொருத்தப் பட்டுள்ளன.துப்பாக்கிச் சூடுகளும் காரைத் துளைக்காது.காரின் ஜன்னல் கண்ணாடிகள் ஒவ்வொன்றும் 5 அங்குலம் தடிமன் கொண்டவை. உடைக்க முடியாத தொழிநுட்பத்தில் தயாரிக்கப் பட்டவை.

காருக்குள் இருந்த படியே அமெரிக்க வெள்ளை மாளிகை துணை ஜனாதிபதி மற்றும் அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி ஆகியோரை உடனே தொடர்பு கொள்ளும் வசதியும் செய்யப் பட்டுள்ளது.

முக்கிய அம்சமாக காருக்குள் இருந்த படியே அமெரிக்க அதிபர் அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிட முடியும்.

உலகிலேயே இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட ஒரு வாகனம் அமெரிக்க அதிபருக்காக மாத்திரம் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மொத்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு, படை பலம் அனைத்தும் அமெரிக்காவிடம் அடைமானம் வைக்கப் பட்டதன் பின்னால் அமெரிக் அதிபரின் வருகை அமைந்திருக்கிறது என்பது மாத்திரம் உண்மை.

நன்றி:RASMIN M.I.Sc

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...