Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 04, 2010

துபையில் அதிக சொத்து முதலீடு செய்வதில் இந்தியர்கள் முதலிடம்!!!

உலக பொருளாதார நெருக்கடியில் பின்தங்கிய துபை,இந்தியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதுவரை ஐரோப்பியர் ஆதிக்கம் செய்து வந்த நிலை மாறி அங்கு இந்தியர்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றனர்.

முக்கியமாக இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நாடாக மட்டும் இல்லாமல் துபை இந்திய நிறுவனங்களுக்கும்,முதலீட்டார்களுக்கும் சிறந்த இடமாக மாற தொடங்கியுள்ளது.சீனாவிடம் போட்டி போட்டு கொண்டு வரும் இந்தியா சீனாவை போலவே துபையில் தனது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யவும்,உலக சந்தையில் விற்பனை செய்வத்ற்கும் சிறந்த இடமாக துபையை கருதுகிறது.


இந்நிலையில் தற்போது துபையில் அதிக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதில் இந்தியர்கள் முதலிடம் பெற்று பிரித்தானியர்கள், கனடியர்கள், ஈரானியர்ளை பின்னுக்கு தள்ளியுள்ளனர். ரெயிடின் டாட் காம் என்ற வலைதளம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதத்தில் துபையில் இந்தியர்கள் வாங்கி குவித்துள்ள நில சொத்து மதிப்பு 9.3 பில்லியன் திர்ஹம்ஸ் ஆகும். இது இந்த கால அவகாசத்தில் நடந்துள்ள மொத்த 48.9பில்லியனில் 19% சதவீதம்.

ரெயிடின் டாட் காம் துபை நிலத்துறை தகவல் ஆதாரத்துடன் கூட்டு வைத்துள்ள இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துறையை சேர்ந்த நிர்வாகி முகம்மது சுல்தான் தானி கூறுகையில் இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் வரையில் 30,615 விற்பனை வர்த்தகங்கள் நடந்துள்ளன. சென்ற வருடம் 43,000 நில விற்பனை வர்த்தகங்களும் 2008ல் 31,613 நில விற்பனை வர்த்தகங்களும் நடந்துள்ளதாக கூறியுள்ளார். ஒரு நாளைக்கு 30 முதல் 35 நில விற்பனை வர்த்தகம் நடைபெறும் இந்த துறையில் அதிகம் விற்பனை ஆவது துபையில் புகழ்பெற்ற ஸ்தலங்கள் ஆன டிஸ்கவரி கார்டன் மற்றும் இன்டர்நேஷனல் சிட்டி ஆகும்.

சமீபத்தில் பிரித்தானிய வங்கிகள் குழுமத்தை சேர்ந்த ஹை.ஸ்.பி.சி. (HSBC) வங்கி வெளியிட்டுள்ள உலக வர்த்தக நிலவர அட்டவணையில் இந்தியா முதல் இடத்திலும்,ஐக்கிய அமீரகம் இரண்டாவது இடத்திலும் அதிக முதலீடுகள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

source: inneram

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...