டெலிபோன் மற்றும் செல்போன் கட்டண தொகையை ரொக்கமாக பெறும் நவீன எந்திரத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஏ.டி.எம். எந்திரம்போல் இந்த எந்திரத்தில் செல்போன் அல்லது டெலிபோன் எண்ணை அழுத்தினால் கட்டணம் எவ்வளவு என்பதை காட்டும். அந்தத் தொகையை எந்திரத்தில் போட்டு விட வேண்டும். அதை ஏற்றுக் கொண்டு ரசீதை வழங்கும். பில் தொகை ரூ.779 என்றால் ரூ.780 ஆகவோ அல்லது ரூ.800 ஆகவோ செலுத்தினால் மீதி தொகையை திருப்பி தராது. ஆனால் கூடுதலாக செலுத்தப்பட்ட பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு அடுத்த பில் தொகையில் அதை கழித்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
சென்னை பி.எஸ்.என்.எல். முதல் கட்டமாக 3 இடங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அண்ணாநகர், அடையார், கோடம்பாக்கம் ஆகிய வாடிக்கையாளர் சேவை மையத்தில் பில் தொகை வசூலிக்க நவீன எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.கே. நகர், பூக்கடை, ஜி.ஆர். காம்ப்ளக்ஸ், கிரிம்ஸ் ரோடு, கெல்லீஸ், கிண்டி ஆகிய 6 இடங்களில் விரைவில் இந்த வசதி விரிவுப்படுத்தப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...