சர்வதேச குழு:தெஹ்ரானில் இடம்பெற்ற வைபவத்தின் போது, இஸ்லாமிய உலகின் சிறந்த பெண் பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வைபவம், 17ஆவது பத்திரிகை மற்றும் செய்தி ஸ்தாபனங்களின் கண்காட்சி இடம்பெற்று வருகின்ற தெஹ்ரானின் இமாம் கொமெய்னி முசல்லாவின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தென்னாபிரிக்காவின் ஷஹ்னாஸ் இப்ராஹீம், லெபனானின் ஸஹ்ரா பத்ருதீன், பாகிஸ்தானின் ஸகிய்யா பதூல், ரஷ்யாவின் தினாரா சதுர்தீன், ஈராக்கின் பாதிமா காமில், இந்தியாவின் ஆரிபா கானூம், ஜேர்மனியின் ஸந்ரா ஆதியா, ஆப்கானிஸ்தானின் ஹலீமா ஹுஸைனிய்யா, லெபனானின் லைலா மஸ்பூதி, தஜிகிஸ்தானின் தர்பா ரஹ்மானி, இந்தோனேசியாவின் ஜிதி ரசூலியா, தாய்லாந்தின் யஹ்யா யுமிரி, பொஸ்னியாவின் ஈதா சிந்து, சிரியாவின் அமல் சுலைமான் மற்றும் சஹம் ரமஸான், பிரித்தானியாவின் அமினா டைலர், அஸர்பைஜானின் சாதாத் அலிசாதேஹ், மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பாஹிமா புர்கிஸ்ரி ஆகியோர், இவ்வைபவத்தில் சிறந்த முஸ்லிம் பெண் பத்திரிகையாளர்களாத் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழளித்து கௌரவிக்கப்பட்டனர்.
5000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணப்பரிசும் தங்கக் கேடயமும் கொண்ட அதியுயர் விருது, காஸா முற்றுகையின் போது அல்ஆலம் செய்தி நெட்வெர்க்கிற்காகப் பணியாற்றிய நிருபர் இஸ்ரா அல்புஹைதிக்கு வழங்கப்பட்டது. அவர் இவ்வைபவத்தில் பிரசன்னமாக இல்லாதிருந்தமையால், அதனை அல்ஆலம் செய்தி நேட்வேர்க்கின் பிரதிநிதியொருவர் பெற்றுக் கொண்டார்.
வைபவத்தில் உரையாற்றிய, மஜ்லிசின் குர்ஆன் மற்றும் இத்ரத் பிரிவின் தலைவியும் மாநாட்டின் செயலாளருமான லாலெ இப்திகாரி, இஸ்லாமிய உலகின் பெண் பத்திரிகையாளர்களுக்கான சங்கமொன்று விரைவில் நிறுவப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...