Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 14, 2010

மரண தண்டனை ரத்து செய்ய இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு

நியூயார்க் : மரண தண்டனையை ரத்து செய்வது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 38 நாடுகள் ஓட்டு போட்டுள்ளன. ஆனால் 107 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடுமையான குற்றம் புரிந்தவர்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன. இதையடுத்து, சில நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன. இது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த ஐ.நா.சபையும் முயன்று வருகிறது.


இதன் அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தின் மீது ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. 107 நாடுகள் ஆதரித்தும், 38 நாடுகள் எதிர்த்தும் ஓட்டு போட்டுள்ளன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்தியா, சீனா, அமெரிக்கா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்ட நாடுகளில் குறிப்பிடத்தக்கவை.


கடந்த 2007ம் ஆண்டு ஐ.நா. பொது சபையில் இதுபோன்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 104 நாடுகள் ஆதரித்தும், 54 நாடுகள் எதிர்த்தும் ஓட்டு போட்டன. 29 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான ஆதரவு பெருகி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், அவர்களது கருத்தை மற்ற நாடுகள் மீது திணிக்க முடியாது என இந்தியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.


ÔÔகுற்றவாளிகளை சட்டப்படி தண்டிப்பதற்கான உரிமை ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மிகக் கடுமையான குற்றம் புரிகிறவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இது மிகமிக அரிது. அதிலும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு மரண தண்டனை கொடுப்பதில்லைÕÕ என இந்திய அதிகாரி அக்வினோ விமல் ஐ.நா.சபையில் தெரிவித்தார்.

Source:CNNTAMIL

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...