Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 07, 2010

வெடித்து சிதறிய எரிமலை: பல கிராமங்கள் நாசம்

மவுண்ட் மெராபி: இந்தோனேசியாவில், மெராபி எரிமலையிலிருந்து வெளியேறிய தீக்குழம்பு, பல கிராமங்களை நாசமாக்கி விட்டது. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் உள்ள மெராபி எரிமலை, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பயங்கரமாக சீறி வந்தது. இந்த எரிமலை, நேற்று முன்தினம் இரவில், திடீரென அதிபயங்கரமாக வெடித்துச் சிதறி, அதிகளவிலான தீக்குழம்பு, சாம்பல் மற்றும் வாயுக்களை வெளியேற்றியது.

இதனால், எரிமலையின் சுற்றுவட்டாரத்திலிருந்த பல கிராமங்கள் தீயில் எரிந்தும், தீக்குழம்பில் சிக்கியும் பலர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர். எரிமலை குழம்பு ஓடிய பாதைகளிலிருந்த கால்நடைகள், கட்டடங்கள், மரங்கள் மற்றும் வாகனங்கள் உருக்குலைந்தன. மெராபி வட்டாரத்தில் ஒரு மருத்துவமனை மட்டுமே உள்ளதால், தீக்குழம்பால் காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை பெற வந்த பலர், மருத்துவமனை ஊழியர்களால் திருப்பி அனுப்பபட்டனர்.

கடந்த 26ம் தேதி முதல் தற்போதுவரை, மெராபி எரிமலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 138 ஆக உயர்ந்துள்ளது. எரிமலையின் சீற்றமும், வெடிப்பும் நேற்று வரை அதிகளவில் காணப்பட்டதால், பாதுகாப்பு வட்டத்தின் எல்லையளவு 15 கி.மீ., தொலைவிலிருந்து 20 கி.மீ., ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ள தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைவோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

source:Cnn

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...