Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 10, 2010

ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பாலியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை மைதானத்தில் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடக்கிறது. இன்றும், நாளையும் சிப்பாய் டெக்னீஷியன் நர்சிங் அசிஸ்டென்ட் பணிக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில் இவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்த்து தேர்வு நடக்கும்.


10ம் தேதி முதல் 12ம் தேதி வரை சிப்பாய் பொதுப் பணிக்கான ஆள் தேர்வும், 12, 13 தேதிகளில் சிப்பாய் வர்த்தகப்பணிக்கான ஆள் தேர்வும் நடக்கிறது. பின் 13,14 தேதிகளில் சிப்பாய் கிளார்க், ஸ்டோர்கீப்பர், டெக்னிக்கல் மற்றும் டி.எஸ்.சி., பணிக்கான ஆள் தேர்வு நடக்கிறது. ராணுவத்தில் சேர விரும்புவோர் 17 வயது முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.

காலை 5.30 மணிக்கே மைதானத்திற்கு வரவேண்டும். நுழைவு வாயிலில் முதலில் உயரம் சரிபார்த்து தேவையான அளவு இருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். பின்னர் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இப்பணிக்காக வருவாய்த் துறை மற்றும் கல்வித் துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் மைதானத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நன்றி:Sai Gokula Krishna

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...