மும்பை,நவ.8:தாக்குதலை நியாயப்படுத்த சில தீவிரவாதிகள் இஸ்லாம் என்ற மகத்தான மார்க்கத்தை வளைக்கின்றார்கள் என ஒபாமா கூறுகிறார்.
மும்பை புனித சேவியர் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடிய ஒபாமா, முஸ்லிம் மாணவர் ஒருவர் ஜிஹாதைக் குறித்து கேள்வியெழுப்பிய பொழுது அளித்த பதிலில் கூறியதாவது: "நமக்கிடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு பரிகாரம் காண தாக்குதல்தான் தீர்வு என்ற நிலைப்பாட்டை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நிரபராதிகளுக்கெதிரான அக்கிரமங்களை நியாயப்படுத்துவதற்கு இஸ்லாம் என்ற மகத்தான மார்க்கத்தை சில தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர்.
மதத்தின் அடிப்படையிலான போர் என்ற நிலைப்பாட்டை கொண்டவர்களை எவ்வாறு தனிமைப்படுத்துவது? என்பது உலகம் சந்திக்கும் சவால்களில் முக்கியமானதாகும்.
இஸ்லாம் ஒரு மகத்தான ஒரு மதம். அதனை பின்பற்றுவோர்களில் பெரும்பாலோர் சமாதானம், நீதி, பொறுமை ஆகியவற்றில் நம்பிக்கொண்டோராவர்." இவ்வாறு ஒபாமா கூறினார்.
செய்தி:தேஜஸ் நாளிதழ்&பாலைவனத் தூது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...