மராட்டிய மாநிலம் மாலேகானில் சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் இந்து சாமியார்ணகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பெண் சாமியார் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே ஆஜ்மீர் குண்டு வெடிப்பிலும் ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் இந்து சாமியார்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது பற்றி சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மாலேகான், ஆஜ்மீர், ஐதராபாத் ஆகிய குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து சி.பி.ஐ. பல்வேறு தகவல்களை திரட்டியது.
அப்போது ஹரித்து வாரைச் சேர்ந்த அபினவ் பாரத் என்ற அமைப்பு குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.
அபினவ் பாரத் அமைப்பின் தலைவராக அசீமானாந்த் செயல் பட்டு வந்தார். இவர் இந்து ஜீயர் ஆவார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சி.பி.ஐ. போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
குண்டு வெடிப்பு தொடர்பான டெலிபோன் உரையாடல்கள், தஸ்தா வேஜிகள் ஆகியவற்றை சி.பி.ஐ. திரட்டியது. இதில் அசீமானாந்த்தும் அவரது சீடர்களும் சேர்ந்து குண்டு வெடிப்பு சதியில் ஈடுபட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து நேற்று போலீஸ்படை ஹரித்து வாரில் உள்ள அபினவ்பாரத் அமைப்பின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாமியார் அசீமானாந்த்தை கைது செய்தனர்.
ஏற்கனவே இந்த சம்பவத்தில் சாமியாரின் சீடர்கள் சுனில் டாங்ரே, ராமச்நந்திரகல்சங்ரா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களது தலைக்கு தலாரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அசீமானாந்த் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது சீடர்களை பிடிப்பதில் சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது.
கைதான அசீமானாந்த் உயிரியல் பட்டதாரி ஆவார் இவரது சொந்த ஊர் மேற்கு வங்காள மாநிலம் ஹீக்ளி ஆகும். ஐடின் சட்டர்ஜி, நாபாகுமார் சர்க்கான் என்ற பெயர்கள் இவருக்கு உண்டு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...