Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 18, 2010

சிதம்பரத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் திறப்பு விழா

சிதம்பரத்தில் புதியதாக கட்டப்பட்ட வட் டார போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழாவில் முக்கிய நகரங்களுக்கு செல்ல 10 புதிய பஸ்கள் இயக்கப் பட்டன.

சிதம்பரம் புறவழிச்சாலையில் சி.முட்லூரில் 89.5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல் வம் தலைமை தாங்கினார். துணை போக்குவரத்து ஆணையர் முருகானந்தம் வரவேற்றார். போக்குவரத்து ஆணையர் ராஜாராமன், கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், எம்.எல்.ஏ., ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.

போக்குவரத் துத் துறை அமைச்சர் நேரு, புதிய அலுவலகம் மற்றும் ஓட்டுனர் தேர்வு தளத்தை திறந்து வைத்தார். கடலூர் - திருச்சி, நெய்வேலி - பழனி, சிதம்பரம் - திருப்பதி, விருத்தாசலம் - சென்னை, சிதம்பரம் - சென்னை உட்பட முக்கிய நகர பகுதிகளுக்குச் செல்லும் 10 புதிய பஸ்களை சுகாதாரத்துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழாவில் சேர்மன்கள் முத்து பெருமாள், மாமல் லன், பேரூராட்சி தலைவர்கள் முகம்மது யூனுஸ், ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் நல்லத் தம்பி, மதியழகன், தமிழ் நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, சிதம்பரம் கவுன் சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ், ஊராட்சி தலைவர்கள் தவமந்திரி வெங்கடேசன், தனலட்சுமி ரவி, லட்சுமணன், அம்சவள்ளி தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்
source:dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...