Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 13, 2010

அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகையுடன் பணிபுரியும் முதல் சீக்கிய வாலிபர்

அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் தங்களின் மத அடையாளங்களை பயன்படுத்த கூடாது என்ற சட்டம் உள்ளது. ஆனால், அதில் சீக்கியர்களுக்கு மட்டும் தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டும் தங்களின் மத அடையாளமான தலைப்பாகை அணியவும், தாடி வளர்த்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கண்ட மத அடையாளங்களுடன் சீக்கிய வாலிபர் ஒருவர் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் சிம்ரன் பிரீத் சிங் லம்பா (26). இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்கர் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.

பயிற்சியின்போது இவர் தனது மத அடையாளங்களுடன் பங்கேற்றார். இதற்கு கடந்த மார்ச் மாதம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் சீக்கிய மத அடையாளமான தலைப்பாகை அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து, அவர் தனது பயிற்சியை முழுமையாக முடித்து அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிகிறார். கடந்த 20 ஆண்டுகளில் மத அடையாளத்துடன் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் முதல் சீக்கியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

சீக்கியர்கள் மீதுள்ள உண்மை மற்றும் நம்பிக்கை அடிப்படையில் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக லம்பா தெரிவித்துள்ளார்.
Source:MAALAI MALAR

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...