Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 13, 2013

நானோ தொழில்நுட்பத்தில் (Nanotechnology)ஓராண்டு எம்பில்‏

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்பத்தில் ஓராண்டு எம்பில் படிப்பில் சேர விரும்பும் முதுநிலை பட்டதாரி மாணவ, மாணவியர் ஜூலை 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) கே.பிச்சுமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலுள்ள உயிரி பள்ளியிலுள்ள மரபணு பொறியியல் துறையில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஓராண்டு(2 பருவம்) எம்பில் படிப்பில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இப்படிப்பில் சேருவதற்கு, எம்எஸ்சியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், உயிரிதொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண்மை, கால்நடைத்துறை, எம்பிபிஎஸ், எம்இ, எம்டெக், நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பம், பொருள் பொறியியல், ரசாயன பொறியியல், உயிரி தொழில்நுட்பம் முதுநிலை பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

முதுநிலை பட்டத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் போது முதுநிலை பட்டத்தை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளம் httpwww.mkuniversity.org என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை-625021 என்ற முகவரிக்கு ஜூலை 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், THE REGISTRAR, MADURAI KAMARAJAR UNIVERSITY என்ற தலைப்பில் மதுரையில் மாற்றத்தக்க வகையிலான வரைவோலையை இணைக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையி்ல மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பதாரர்கள்கண்டிப்பாக, மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள உயரிதொழில்நுட்பப் பள்ளியில் ஜூலை 27-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் நுழைவுத்தேர்வில் பங்கேற்க வேண்டும். அரசு விதிகளின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும், என தெரிவித்துள்ளார்.

நானோ உயிரித் தொழில்நுட்பம்

நானோ உயிரித் தொழில்நுட்பம் என்பது உயிரியல் மற்றும் உயிரி இரசாயனப் பயன்பாடுகள் அல்லது பயன்களுடன் கூடிய நானோ தொழில்நுட்பத்தின் கிளை ஆகும். நானோ உயிரித் தொழில்நுட்பமானது பொதுவாக புதிய சாதனங்களை உருவாக்குவதற்காக இயற்கையில் ஏற்கனவே இருக்கும் தனிமங்களில் ஆய்வு மேற்கொள்வதாக இருக்கிறது.

[1] உயிரி நானோ தொழில்நுட்பம் என்ற சொல்லானது பொதுவாக நானோ உயிரித் தொழில்நுட்பத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
 எனினும் சில நேரங்களில்
இரண்டுக்கும் இடையே தனித்தன்மைகள் உணரப்படுகிறது. இந்த இரண்டும் வேறுபாடு உடையதாக இருந்தால் நானோ உயிரித் தொழில்நுட்பமானது உயிரித் தொழில்நுட்பத்தின் நோக்கங்களை ஆதரிக்க நானோ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துமாறு பொதுவாக குறிப்பிடுகிறது. அதே சமயம் உயிரி நானோ தொழில்நுட்பம் என்பது நானோ தொழில்நுட்பத்திலான சாதனங்களுக்கான பகுதியாக அல்லது ஒரு உத்வேகமாக உயிரி மூலக்கூறுகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட உயிரியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையில் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் எதையும் குறிப்பிடலாம்.

[2] நானோ உயிரித் தொழில்நுட்பமானது உயிரி உணர்கருவிகள் போன்ற புதிய சாதனங்களை உருவாக்குவதற்கு இயற்கையின் தனிமங்களில் இருந்து உயிரியல் சார் மற்றும் உயிரி இரசாயனம் சார் நடவடிக்கைகளின் ஆய்வு மற்றும் பயன்பாடுகளுடன் தொடர்புபடுகின்ற ஒன்றின் ஒரு கிளையாகும். நானோ உயிரித் தொழில்நுட்பமானது குறிப்பாக உந்துமவியல், வேதியியல், உயிரியல், உயிரி இயற்பியல் நானோ மருத்துவம் மற்றும் பொறியியல் ஒருங்குதல் ஆகிய துறைகளில் உயிரி உணர்கருவிகளுடன் தொடர்புடைய ஒன்றுடன் ஒன்று இணைந்த பல் ஒழுங்கு முறை நடவடிக்கைகளை விவரிப்பதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டுக்காகப் பயன்படுகின்ற உயிரியலிலுள்ள அளவீடு, இரட்டை முனைவாக்கம் தலையீட்டுமானம் போன்ற அலை வழிகாட்டி நுட்பங்கள் மற்றொரு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

source: tntjstudentwing & wikipedia

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...