Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 20, 2013

பொருளாதார மந்த நிலை அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரமே திவால்!

வாஷிங்டன்:உலகம் முழுவதும் தற்போது காணப்பட்டு வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்காவின் பிரபல தொழில் நகரமான டெட்ராய்ட் நகரமே திவாலானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஐரோப்பா உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இதற்கு வளர்ந்த நாடுகளும் தப்பவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் மிக முக்கிய தொழில் நகரமான டெட்ராய்ட் ஒட்டுமொத்தமாக திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் போர்டு கார் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய கம்பெனிகள் உள்ளன. அமெரிக்காவின் வருவாயில் இந்த நகரம் பெரும் பங்கு வகித்தது. இப்போது, ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத அளவில் கம்பெனிகள் நலிந்து விட்டன. தற்போது பொருளாதார நெருக்கடியில் டெட்ராய்ட் நகரமே சிக்கி தவிப்பதாக மிக்சிகன் மாகாண முதல்வர் ரிக் டைசர் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக டெட்ராய்ட் நகரம் கடனில் சிக்கி தவித்து வருகிறது. முன்பு இந்த நகரில் 20 லட்சம் பேர் வசித்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது 5 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். தற்போது இந்த நகருக்கு ரூ.1.08 லட்சம் கோடி கடன் உள்ளது. ஒவ்வொரு டாலர் வருவாய்க்கும் 35 சதவீதம் கடன் தொகை நிலுவை உள்ளது. 2017ல் இந்த கடன் தொகை வீதம் 65 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இந்த கடனை அடைக்க மாகாண நிர்வாகத்திடம் நிதி இல்லாததால் திவால் நோட்டீஸ்
அறிவிப்பு வெளியிட நேர்ந்துள்ளது என்றார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-maalaimurasu

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...