Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 29, 2013

எகிப்து இராணுவத்தின் கூட்டுப்படுகொலை !

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மொர்சி மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எகிப்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த ஹோஸ்னி முபாரக் 2011ம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சி மூலம் பதவி விலகினார். முஸ்லிம் சகோதர அமைப்பை சேர்ந்த முகமது மொர்சி ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் மூலம் அதிபரானார். முர்சி ஆட்சியிலும் பொருளாதார சீரழிவு வறுமை வேலையின்மை, போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படாததால், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் கெய்ரோவின் தாரிர் சதுக்கத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடி மொர்சியை பதவி விலகும்படி கோரினர்.

இந்த சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டது. கடந்த 3ம் தேதி ராணுவ புரட்சி மூலம் முர்சி ஆட்சி கலைக்கப்பட்டது. எகிப்து தலைமை நீதிபதி முகமது மன்சூர் இடைக்கால அதிபராக பொறுப் பேற்றுள்ளார்.இதற்கிடையே முன்னாள் அதிபர் மொர்சி மீது கடந்த வாரம் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதை கண்டித்து முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததால், ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 200 பேர் கொல்லப்பட்டதாகவும், 5,000 பேர் காயமடைந்ததாகவும், முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பின் இணைய தளம் தெரிவிக்கிறது.

ஆனால் 80 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் 792 காயமடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீது அதிகப்படியான அடக்குமுறை காட்டுவதற்கு துணை அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான முகமது எல்பராடி கண்டனம் தெரிவித்துள்ளார்.நாட்டில் அமைதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும் படி ஐ.நா.,வும், அமெரிக்க மற்றும் கனடா நாடுகளும், எகிப்து அரசை வலியுறுத்தியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...