Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 30, 2013

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் 'ஹஜ்' யாத்திரை செல்ல அனுமதி: அமைச்சர்

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரகீம் இன்று காலை கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா? விடுதி அறைகள் சுத்தமாக வைக்கப்பட்டு உள்ளதா? உணவு பொருட்களின் இருப்பு சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக அமைச்சர் அப்துல் ரகீம் கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த ஆண்டு 3 ஆயிரம் பேருக்கு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை கொடுக்கப்பட்டு வந்த ரூ.20 லட்சம் மானியம் ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் வக்பு வாரியத்துக்கான சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு ரூ.670 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.756 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 1290 மாணவ–மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 80 ஆயிரம் மாணவ–மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். மேலும் இந்த ஆண்டு கூடுதலாக 10 மாணவர் விடுதிகள் தொடங்க
திட்ட மிட்டுள்ளோம்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாவட்ட அலுவலகங்களிலும், மாணவர்கள் விடுதிகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆகஸ்டு 10–ந் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் விடுதிகளை பராமரிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி 24 சமுதாயத்தினர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான ஆணையர் பரிந்துரை செய்தால் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...