Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 31, 2013

காட்டுமன்னார்கோவில்-சிதம்பரம்- குமராச்சி வழி சாலையை சீர்செய்ய கோரிக்கை

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் இருந்து குமராட்சி வழியாக சிதம்பரம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மேடும், பள்ளமுமாக காணப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அதிக அளவில் கிராமங்கள் உள்ளது.

கிராமமக்கள் காட்டுமன்னார்கோவிலை அடுத்து சிதம்பரம் நகரத்துக்கு பல்வேறு பணிகளுக்காக செல்கின்றனர். மேலும் இங்கு அண்ணாமலை பல்கலைக் கழகம் செயல்படுவதால் மாணவர்கள், பணிபுரியும் அலுவலர்கள், பேராசிரியர்கள் என தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவமனைகள் உள்ளதால் அதிகம் பேர் இந்த சாலை வழியாக செல்ல நேரிடுகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டால் இந்த சாலை நகாய் என்று அழைக்கப்படும் நேஷனல் ரோடு அத்தாரிட்டி ஆப் இந்தியா என்ற மத்திய அரசின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தான் சீர்செய்ய வேண்டும் என கூறி தட்டிக் கழித்து
வருகின்றனர்.

சிறு, சிறு பள்ளங்களை கூட சீர்செய்ய நெடுஞ்சாலை துறை முன் வரவில்லை. இதன் காரணமாக பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரம் வரை செல்லும் சாலையை சீர்செய்ய வேண்டும் என பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தினகரன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...