Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 30, 2013

கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பு குழு

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா, புகையிலை மற்றும் நிக்கோடின் சேர்க்கப்பட்ட உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை தடுப்பதற்கான ஆய்வு கூட்டம் ஆட்சியர் கிர்லோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், வருவாய்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை, வணிகவரிதுறை, போக்கு வரத்து துறை காவல்துறை, நகராட்சித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதற்கட்டமாக வணிக வரிதுறை தணிக்கை சாவடி, காவல்துறை தணிக்கை சாவடி மற்றும் போக்கு வரத்து துறை தணிக்கை சாவடிகளில் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தப்படாமல் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையை தடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆட்சியர் கிர்லோஷ்குமார் தலைமையில் குழு
அமைக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.பி, மாவட்ட வருவாய் ஆய்வாளர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர். ராஜா செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...