Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 03, 2013

உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் 1 கோடி பேர் பாதிப்பு: ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் கடந்த 32 ஆண்டுகளாக பரவி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி 1 கோடி பேரை கடுமையான எய்ட்ஸ் தாக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 2015-ம் ஆண்டில் 65 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர். அல்லது பாதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது

Acquired Immune Deficiency Syndrome (Aids) - என்பதே இதன் விரிவாக்கம். அதாவது மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை குறைத்துவிடும் வைரஸ் தாக்குதலே எய்ட்ஸ் எனப்படும். மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் வைரஸ் ஆன HIV + (Human Immunodeficiency Virus) மனிதனின் இரத்தத்தில் கலந்துவிடுவதனால் எய்ட்ஸ் மனிதனைத் தாக்கிவிடுகிறது. இரத்தத்தில் கலந்த ஹெச்.ஐ.வி வைரஸின் முதல் வேலையாக மனித இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்திச் செல்களான வெள்ளை அணுக்களை அழிக்கிறது. அச்செல்களை அழிப்பதோடல்லாமல் ஹெச்.ஐ.வி வைரஸும் பல்கிப் பெருகிக் கொண்டே செல்கிறது. இவ்வாறாக மனித உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் (Anti Body) குறைத்து விடுவதால் பிறகு அம்மனிதனுக்குத் தாக்கும் பாக்டீரியாக்கள் மூலமாக காய்ச்சல், தலைவலி போன்ற எந்தவிதமான நோய் ஏற்பட்டாலும் அது குணமாவதற்கு நெடுங்காலம் எடுத்துக் கொள்கிறது. பிறகு தாக்கப்படும் நோயினால் அவர் மரணத்தை அடைந்து விடுகிறார்.
சில சமயம் அதிக பட்சமாக 6முதல் 10வருடங்கள் கூட இந்த பாதிப்புக்கு எடுத்துக் கொள்கிறது. எனினும் எய்ட்ஸ் பாதித்த மனிதன் மிக விரைவிலேயே அவர் தன் நோய் எதிர்ப்புச் சக்திக்கேற்ப மரணத்தைச் சந்தித்து விடுகிறான்.

 எய்ட்ஸின் துவக்கம்
1983-ல் மருத்துவ வல்லுனர்களான லுக் மான்டாக்னெர் மற்றும் நேஷனல் கேன்சர் இன்ஸ்ட்டியூட்டை சேர்ந்த ராபர்ட் கேலோ குழுவும் மனிதர்களுக்குத் தாக்கும் புதுவகையான வைரஸ்ஸைக் கண்டறிந்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக இந்த வைரஸ் ஆனது முறையற்ற பாலியல் தொடர்புகளின் போது உருவாகி இரத்தத்தில் கலந்து விடுவதை கண்டறிந்தனர்.

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?
எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இன்று இந்த உலகில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது.

1. பாதுகாப்பற்ற உடல் உறவு (ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பு வழியாக புணர்தல்).

2.பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது

3.கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.

ஆரம்ப அறிகுறிகள் ஹெச்.ஐ.வி தாக்கிய முதல் மூன்று வாரங்களிலேயே அம்மனிதனுக்கு
தொடர் காய்ச்சல், தலைவலி, தோல் வியாதிகள், உடல் வேதனை போன்றவைகள் அதிகமாகிவிடுகின்றன. இச்சமயத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ் ஆனது பிளவுபட்டு பிளவுபட்டு அதிகரித்துக் கொண்டே சென்றுவிடுகிறது. இதன் காரணமாக பசியின்மை, உடல் முற்றிலும் இளைத்துவிடுதல் ஆகியவைகளுக்கு ஆளாகின்றான்.

இந்த வைரஸ் ஆனது நேரடியாக மனித இரத்தத்தில் பாய்ந்து வெள்ளை அணுக்களை அழிப்பதாலும், அதே சமயம் இதன் உற்பத்தியையும் பெருக்கிக் கொண்டிருப்பதாலும் இதற்கு மருந்து கண்டுபிடிப்பது மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாகவே திகழ்ந்து வருகிறது.

பரவும் முறை
மக்கள் அனைவரும் இதன் பாதிப்பை அறிந்து அச்சமுற்றே இருக்கிறார்கள். ஹெச்.ஐ.வி தாக்கிய நோயாளியை சமுதாயத்திலிருந்தே தனிமைப்படுத்தி வைத்துவிடுகிறார்கள். இந்நோயானது பலமுறைகளில் பரவுகிறது. எய்ட்ஸ் பாதிப்படைந்த நாயிடமிருந்து அதன் சிறு குழந்தைக்கும், எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் ஒட்டிய ஊசிகள், பிளேடுகள் போன்ற இரத்த சம்மந்தமான பரவல் முறைகளில் தொற்றிக் கொள்கிறது. எய்ட்ஸ் நோயாளியை தொடுவதாலோ, அவருக்குக் கடித்த கொசு பிறருக்குக் கடிப்பதாலோ, அவர் இருமல், தும்மல் மூலமாகவோ அல்லது எந்த விதமான காற்றின் மூலமாகவோ பரவுவதில்லை. எனவே எய்ட்ஸ் நோயாளிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்காமல் அவருடன் பழகுங்கள். எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரை சமுதாயம் ஒதுக்கித் தள்ளுவதால் அவர்கள் மனதளவில் பெரும் அவதியடைகிறார்கள். பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே இந்த ஆட்கொல்லி நோயிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

சுருக்கமாக: 
அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்! கண்ணியத்திற்குரிய அல்லாஹுவின் கூற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிப்படையான, இரகசியமான, மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள் (அல்குர்ஆன் 6: 151) 

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும் மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துக் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது (அல்-குர்ஆன் 17: 32)


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...