Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 13, 2012

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை!

இறைவனின் இறுதித் தூதரான, முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிகக் கேவலமாக விமர்சிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த அவதூறான திரைப்படம் லிபியாவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பே அங்குள்ள அமெரிக்க தூதர் உள்பட நான்குபேரின் படுகொலைக்கு வழிவகுத்தது. அமெரிக்காவின் அடாவடித்தனத்தை கண்டித்து தமிழகத்திலும் பல்வேறு  சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! என்றும் தமிழகம் எங்கும் பரவலாக கண்டன ஆர்ப்பாட்டம நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் அறிவிக்கின்றது. பொது செயலார் தனது அறிக்கையில் குறிப்பிடும் போது சென்னையில் 15-9-2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமெரிக்க தூரகம் முற்றுகையாகவும் சென்னை அல்லாத மற்ற பகுதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 முஸ்லிம் சமூகத்தின் உயிர் மூச்சானமுஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில்உள்ளவர்கள் செய்துவருகிறார்கள். இவ்வாறு செய்பவர்களை அந்நாட்டு அரசாங்கங்கள்தண்டிப்பதாக தெரியவில்லை. இத்தகைய செயலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்இந்தியாவின் சார்பாக
சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை இன்று(13.09.2012) மாலை 4 மணியளவில் முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...