Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 08, 2012

ஐ.நா உறுப்பு நாடு:ஃபலஸ்தீனுக்கு ஆதரவு – அரபு லீக்!

கெய்ரோ:இம்மாத இறுதியில் ஐ.நாவில் உறுப்பினர் இல்லாத நாடு என்ற பதவியை பெற முயற்சிக்கும் ஃபலஸ்தீனுக்கு ஆதரவளிப்போம் என்று அரபு லீக் பொதுச்செயலாளர் ஜெனரல் நபீல் அல் அரபி தெரிவித்துள்ளார். பூரண உறுப்பினர் பதவியை பெறுவதில் உள்ள சிக்கல்களை கவனத்தில் கொண்டு உறுப்பினர் அல்லாத பதவியை பெறுவதற்கான ஃபலஸ்தீனின் முயற்சிகளை ஆதரிக்க முடிவுச் செய்துள்ளதாக நபீல் அல் அரபி கூறினார்.

 ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி கிடைத்தால் தான் ஃபலஸ்தீனுக்கு ஐ.நா உறுப்பினர் நாடு பதவி வழங்கப்படும். ஐ.நா பொது அவையில் இம்மாதம் 27-ஆம் தேதி ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் விண்ணப்ப மனுவை அளிப்பார். தற்பொழுது ஃபலஸ்தீனுக்கு பார்வையாளர் பதவி மட்டுமே ஐ.நாவில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூரண உறுப்பினர் பதவிக்கான மஹ்மூத் அப்பாஸின் மனுவை அமெரிக்கா வீட்டோச் செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பிற்கு மனு அளிக்கப்படவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...