Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 11, 2012

ஜேர்மனியில் சுன்னத் செய்வதற்கான தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

ஜெர்மனியில், சுன்னத் செய்வதற்கு, கோர்ட் விதித்துள்ள தடையை எதிர்த்து, முஸ்லிம் மற்றும் யூதர்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர். ஜெர்மனியின், கோலோன், நகர கோர்ட், சிறுவர்களுக்கு சுன்னத் செய்யும் நடைமுறைக்கு தடை விதித்துள்ளது. “பெரியவர்கள் சம்மதித்தால், அவர்களுக்கு சுன்னத் செய்யலாம்’ என, கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கோலோன் நகர கோர்ட்டின், இந்த உத்தரவால், மற்ற நகரங்களில் உள்ள டாக்டர்களும், சுன்னத் செய்வதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள மறுக்கின்றனர். சுன்னத் செய்வதற்குரிய தடையை நீக்கக்கோரி, யூதர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து, பெர்லின் நகரில் நேற்று, போராட்டம் நடத்தினர். மத சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் படி, இவர்கள் கோஷம் எழுப்பினர். முஸ்லிம்களில், வழக்கத்திற்கு ஏற்றபடி, தகுந்த வயதில், சுன்னத் செய்வது வழக்கமாக உள்ளது.யூத சமுதாயத்தில், குழந்தை பிறந்த எட்டாவது நாளில், சுன்னத்
செய்வது மரபாக உள்ளது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...