Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 05, 2012

ஓட்டுனர் உரிமம் பெற உடல் உறுப்பு தானம் செய்வதாக விருப்பம் தெரிவிக்க வேண்டும்-விரைவில் புதிய கட்டுப்பாடு

சென்னை- வாகனங்கள் பெருக்கத்துக்கு ஏற்ப விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியா முழுவதும் மணிக்கு 17 பேர் வீதம் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். தினமும் 390 பேர் உயிரிழப்பதாக ஆவணங்களில் பதிவாகி உள்ளன. விபத்தில் படுகாயம் அடைபவர்களின் உறுப்புகள் பாதிக்கப்படுபவர்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட உறுப்புகள் தானமாகவோ அல்லது விலைக்கோ கிடைக்காமல் அதன் மூலம் மரணம் அடைபவர்களும் உண்டு. உடல் உறுப்பு தானம் குறித்து எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய வழிமுறைகளை கையாள மத்திய சுகாதார அமைச்சகம் தீர்மானித்தது.

       ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர்களிடம் விபத்து ஏற்பட்டால் உடல் உறுப்பு தானம் செய்வதாக விருப்பம் தெரிவிக்கும் வகையில், விண்ணப்பங்களில் கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதற்கு வசதியாக மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகள் குறித்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வல்லுனர்களுடன் சுகாதார துணை அமைச்சக அதிகாரிகள் கடந்த மாதம் 30-ஆம் தேதி விரிவாக ஆலோசனை நடத்தினர். ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனால், விண்ணப்பத்தில் அதற்கான பகுதியில் ஆம் அல்லது இல்லை என்று கட்டாயம் தங்களது விருப்பத்தை குறிப்பிட்டு ஆக வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இந்த மசோதா நகல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்துக்கு போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், மோட்டார் வாகன சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சக
இணை செயலாளர் நிதின் கோகர்ன் கூறுகையில், சுகாதார துறை அமைச்சகம் அனுப்பியுள்ள செயல் திட்டத்தை கவனமாக ஆராய்ந்து வருகிறோம். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எதுவும் செய்ய முடியாது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...