Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 01, 2012

பல்கலைகழக விரிவுரையாளருக்கான செட் தேர்வு தேதி அறிவிப்பு


பல்கலைகழக விரிவுரையாளருக்கான செட் தேர்வு தேதி அறிவிப்பு

பாரதியார் பல்கலை கழகம் சார்பில் மாநில அரசின் கீழ் இயங்கும் அரசு கல்லூரிகள் மற்றும்பல்கலைகழகங்களில் விரிவுரையாளர்உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கு நடத்தப்படும் செட்தேர்வு வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளதுபல்கலை கழக மானியகுழுவின் அனுமதியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 முதன்மை தேர்வு மையங்களின் மூலம், 53தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளதுபல்கலைகழக மானியக் குழு அனுமதித்துள்ளதமிழ்ஆங்கிலம்சட்டம் உள்ளிட்ட 27 பாடப்பிரிவுகளில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வு எழுத தகுதிகள்

இத்தேர்வுக்கு பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு இறுதியாண்டு படிக்கும்மாணவர்கள் மட்டுமே பங்குபெற முடியும்முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களும், (SC,STமற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களும்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்
பொதுப்பிரிவினருக்கு 1000 ரூபாயும்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(பிற்படுத்தப்பட் மு்லிம்உட்பட) 750 ரூபாயும், SC,ST மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு 250 ரூபாயாகவும் தேர்வுக் கட்டணம்நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இத்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே முடியும்விண்ணபிக்க வேண்டிய இணையதளமுகவரி http://www.b-u.ac.in/set2012/index.php.

இணையதளம் மூலம் விண்ணப்பதை பூர்த்தி செய்துஅதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி,தேவையான விண்ணப்ப நகல்தேர்வு வருகை பற்றிய தாள்தேர்வு அனுமதிச் சீட்டுதேர்வுக் கட்டணம்செலுத்திய வங்கி சலான் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் போன்றவற்றை இணைத்துசெயலர்,விரிவுரையாளர் மாநில தகுதிக்கான தேர்வு -2012, பாரதியார் பல்கலைகழகம்கோவை - 641046 என்றமுகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தின் மீதுவிரிவுரையாளர் மாநில தகுதிக்கான தேர்வு- 2012 என்று கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்.14ம் தேதி மாலைக்குள்பல்கலை வந்து சேரவேண்டும்இணையதளம் வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க, செப்.7ம் தேதி கடைசி நாள்விண்ணபங்களைகேட்கப்பட்டுள்ள இணைப்புகளோடு மேற்கண்ட முகவரிக்கு செப்., 14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மூன்று தாள்கள் கொண்ட இத்தேர்வில்முதல் தாள் அக்டோபர் 7ம் தேதி காலை, 9.30 முதல், 10:45 மணிவரையும் இரண்டாம் தாள், 10:45 முதல், 12 மணி வரையும்மூன்றாம் தாள் மதியம், 1.30 முதல், 4 மணிவரையும் நடைபெறும்
 
தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்   
பிரிவு
முதல் மற்றும் இரண்டாம்தாள்
மூன்றாம்தாள் 
பொது பிரிவினர்
40
50
பிற்படுத்தப்பட்டோர்
35
45
தாழ்த்தப்பட்டோர்பழங்குடியினர்,மாற்றுத் திறனாளிகள்
35
40

இத்தேர்வு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு TNTJ மாணவர் அணியை தொடர்பு கொள்ளவும்.

nanri:அஜ்மல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...