Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 26, 2012

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பிளாஸ்டிக் குடம் விற்பனை அமோகம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள கிராமங்களில் மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் காலை நேரத்தில் பொதுமக்கள் தண்ணீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். மின் மோட்டார்கள் அமைத்துள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பெற வேண்டிய நிலையில் உள்ளனர். வீடுகளுக்கு அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தண்ணீர் வரும் நேரத்தில் குழாய்களில் தண்ணீரை பிடிக்கின்றனர்.

 இந்நிலையில் மும்முனை மின்சாரத்தின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று வயல்கள், கொல்லைகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றின் மூலம் தண்ணீர் பிடித்து வருகின்றனர். வீடுகளில் சில்வர், பித்தளை குடங்களிலேயே தண்ணீர் பிடித்து வந்தனர். தற்போது நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் பிளாஸ்டிக் குடங்களை அதிக அளவில் கிராமங்களில் வாங்கி வருகின்றனர். இதனால் பிளாஸ் டிக் குடங்கள் விற்பவர்கள் கிராமங்களை நோக்கி அதிகம் பேர் செல்கின்றனர். இதுபற்றி பழஞ்சநல்லூரில் பிளாஸ்டிக் குடம் வாங்கும் பெண்களை கேட்ட போது தற்போது அதிக தூரம் நடந்து செல்கிறோம். இதனால் சில்வர் பித்தளை குடங்களில் தண்ணீரை நிரப்பி தூக்கி கொண்டு வர இயலவில்லை. ஆகையால் பிளாஸ்டிக் குடங்களை வாங்கி வருகிறோம்.

பிளாஸ்டிக் குடத்தின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ.50க்கு வாங்கிய குடங்கள் ரூ. 80க்கு
தற்போது விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...