வக்பு வாரியத்தின் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் சார்பில், வக்பு வாரியத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்த அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தேர்தலில் ஓட்டளிப்பவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அடுத்ததாக, சமீபத்தில் தேர்தல் நடந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்களில் இருந்து, வாரியத்தின் தலைவரை தேர்வு செய்வதற்காக, கடந்த 10ம் தேதி வக்பு வாரியத்தின் கூட்டம் நடந்தது. வாரிய தலைமை செயல் அதிகாரி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், உறுப்பினரான தமிழ்மகன் உசேன், வாரியத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற மாநில செயலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...