Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 22, 2012

உண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது!

உண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது - உணர்வலைகள்
     முஸ்லிம்கள் தங்களது உயிரை விட மேலாக மதிக்கக்கூடிய உத்தம தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தீவிரவாதியாககாமுகராக சித்தரித்து படமெடுத்ததன் மூலம் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்து திட்டம் தீட்டினர் அயோக்கிய யூதனும்கேவலப்பட்ட பாதிரியும்.
     ஆனால் எப்போதெல்லாம் இஸ்லாம் தாக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியடைந்து வரும் நிகழ்வுகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
     இதற்கு முன்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. தகர்த்தது இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கூறி ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தது அமெரிக்கா.
     அமெரிக்கா தாக்குதல் தொடுத்தது ஆஃப்கானிஸ்தான் மீது மட்டுமல்லஇஸ்லாத்தின் மீதும்தான்.
     இஸ்லாம்தான் இத்தகைய தீவிரவாத செயல்களைத் தூண்டுகின்றது. அவர்களது வேதம்தான் உலகத்தின் நிம்மதிக்கு குண்டு வைக்கின்றது. அவர்களது இறைத்தூதரின் வழிகாட்டுதல்கள்தான் அவர்களை தீவிரவாதிகளாக்குகின்றன என்று இஸ்லாத்தின் மீது அபாண்டமான அவதூறுகளும்பொய்யான குற்றச்சாட்டுகளும் பரப்பிவிடப்பட்டன.
    இவர்களது இந்த பொய்ப்பிரச்சாரம்தான் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமெங்கும் குறிப்பாக அமெரிக்கா முழுவதும் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி பெறுவதற்கு அடிகோலியது.
இவர்களது இந்த கேடுகெட்ட பிரச்சாரத்தினால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் என்ன தெரியுமா?
    திருக்குர்ஆன் விற்பனை அதிகமானது: அமெரிக்காவிலுள்ள அனைத்து மகாணங்களிலும்அத்தனை புத்தக நிலையங்களிலும் திருக்குர்-ஆன் அதிக அளவு விற்பனையானது. இவர்கள் இஸ்லாத்தின் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றார்களே! இஸ்லாம் என்னதான் சொல்ல வருகின்றது என்று இஸ்லாமியரல்லாதவர்களை ஆய்வு செய்ய அவர்களது பொய்ப்பிரச்சாரம் தூண்டியது.
இணைய தளம் மூலம் எகிறிய அழைப்புப்பணி:
    இணைய தளம் மூலமாக திருக்குர்-ஆன் ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் அதிக அளவு  பதிவிறக்கம் செய்யப்பட்டது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட திருக்குர்-குர்ஆனை மக்கள் சிந்திக்க அது வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது.
பள்ளிவாயில்களை நோக்கி படையெடுத்த பிறமதத்தவர்கள்:
    அமெரிக்க அயோக்கிய அரசோ மற்ற இஸ்லாமிய நாடுகள் மீது தீவிரவாத முத்திரை குத்தி படையெடுத்த நேரத்தில்பிறமத மக்கள்  பள்ளிவாயில்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். பல தேவாலயங்களும்,கேளிக்கை பார்களும் மூடப்பட்டு அவைகள் பள்ளிவாசல்களாக உருமாறின.
இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது :
     இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.
கூகுளில் குர்-ஆன் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன :
     இஸ்லாமிய எதிரிகள் குர்-ஆனைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குர்-ஆன் குறித்து தேடுவோர்மற்றும் இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
நூலகங்களில் குர்-ஆன் காணாமல் போயின :
     எத்தணை பிரதிகள் வாங்கி வைத்த போதும் ஐரோப்பாகனடாஅமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குர்-ஆனையே குறிவைத்து அனைவரும் படிப்பதற்கு எடுத்துக் கொண்டு போவதால் குர்-ஆன் ஸ்டாக் இல்லாமல் போனது.
முஸ்லிம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் :
     மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பணி இவர்களது அவதூறுப் பிரச்சாரத்தால் மிச்சமானது. முஸ்லிம்கள் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.
அணி அணியாய் மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் :
     முன்பைக் காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
     இப்படி இவர்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்த நினைத்தபோதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அதுபோல இப்போது இவர்கள் எடுத்துள்ள இந்தத் திரைப்படமும்,அதனால் முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும்முஸ்லிம்காளின் போராட்டமும் கோடிக்கணக்கான இஸ்லாமியரல்லாத பிறமத மக்களை இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டியுள்ளது.
    அந்த மானம்கெட்டவர்கள்
நமது நபி  மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. அவதூறானவை. ஆனால் அவர்கள் வேதப்புத்தகமாக வைத்துள்ள பைபிளும் அவர்களது மத வழிகாட்டுதல்களும்,அவரது பாதிரிகளும்தான் அப்படிப்பட்டவர்கள் என்பதை உலகமக்களுக்கு உரத்துச் சொல்லவும்உண்மையை உலகறியச் செய்யவும் இப்போதுதான் முஸ்லிம்களுக்கு காலம் கனிந்துள்ளது. தங்களது அழைப்புப்பணியின் வாயிலாக இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்க இஸ்லாமிய உலகம் தயாராகிவிட்டது.
     ஒவ்வொரு தாக்குதல்களின் இறுதியிலும், "இஸ்லாத்திற்கே இறுதி வெற்றி" என்பது இந்த நிகழ்விலும் உண்மையாகும். முஸ்லிம்கள் அதை தங்களது செயல்களின் வாயிலாக நிரூபித்துக்காட்டுவார்கள். இன்ஷா அல்லாஹ்.
 (ஏக இறைவனை) மறுப்போர்உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.  (அல்குர்-ஆன் 5 : 3)  
onlinepj

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...