Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 12, 2012

லேப்டாப் "நாயகன்"!

"பெரியது, சிறியது ஆவதும், சிறியது பெரியது ஆவதும், விஞ்ஞான வளர்ச்சியின் அடையாளங்கள். கம்ப்யூட்டரும் இதற்கு தப்பவில்லை. 1940களில் கண்டுபிடிக்கப்பட்ட "கம்ப்யூட்டர்', வீட்டின் அறை முழுவதையும் அடைத்துக்கொண்டு இருந்தது. நாளடைவில், இது "சுருங்க'த் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1979ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த "பில் மாக்ரிட்ஜ்', கம்ப்யூட்டரின் தனித்தனி பாகங்களை ஒன்று சேர்த்தால் என்ன என சிந்தித்து, முதல் "லேப்டாப்' கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.

 மாற்றி யோசித்த பில்: 
இவர் வடிவமைத்த "கம்ப்யூட்டரில்' கீ போர்டும், மானிட்டரும் ஒன்றாக இணைக்கப்பட்டு, கையில் எடுத்துச் செல்லும் வகையில் இருந்தது. மானிட்டர் சிறிதாக இருந்ததால், அதை மடக்கி, கீ போர்டில் உள்ள இடைவெளியில் வைக்கும் வகையில் வடிவமைத்திருந்தார் பில். இதை கையடக்க கம்ப்யூட்டர் என்றே முதலில் அழைத்தனர். ஆரம்ப காலத்தில் இதை அமெரிக்க ராணுவ மையத்திலும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிலும் பயன்படுத்தினர். இதை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு நிறுவனங்கள், தொடர்ச்சியான ஆய்வுகளில் ஈடுபட்டன.

 1983ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மேனி பெர்னான்டஸ் என்பவர், தான் கண்டுபிடித்த கையடக்க கம்ப்யூட்டரை, "லேப்டாப்' என அறிமுகப்படுத்தினர். இன்று நோட்புக் வடிவத்தில் லேப்டாப் வந்துவிட்டது. லேப்டாப்பை முதலாக வடிவமைத்த பில், சமீப காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். செப்.8ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆனால், சதா "பிசி'யாக இருக்கும் கம்ப்யூட்டர் உலகம் என்னவோ, இவரை மறந்து விட்டது. இவர் இறந்ததே,
உலகில் ஒரு செய்தியாக பேசப்படவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.
-தினமலர் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...