Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 23, 2012

மெழுகுவர்த்தி செய்தல்.. !!

தமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்தால் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு விற்பனை செய்ய முடியும். மெழுகுவர்த்தி செய்வது மிக கடினமான பணியல்ல. வீடுகளிலேயே மிக தரமான மெழுகுவர்த்திகள் செய்யமுடியும்.

இப்போது மெழுகுவர்த்தி செய்யும் முறையினைப் படிப்படியாக காண்போம்:

மெழுகுவர்த்தி செய்ய தேவையான பொருட்கள்:

1. வெண்மெழுகு(paraffin wax) : 900 கிராம்
2. கடின மெழுகு(hard wax) : 100 கிராம்
3. வண்ணநிறமி(dye-oil based)
4. வாசனை எண்ணெய்(essential oil)
5. வார்ப்புகள்(molds - for molding the candles)
6. பாத்திரம்(melting pot)
7. மூங்கில் அல்லது மரக்குச்சி அல்லது கரண்டி(wooden or bamboo sticks)
8. நூல்திரி(wick)
9. அடுப்பு(stove)

மெழுகுவர்த்தி செய்யும் முறை:

* முதலில் மெழுகுகளை உருக்க வேண்டும். அதற்கு boiler method சிறந்த வழி. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை, அதனுள் மற்றொரு பாத்திரத்தில் மெழுகுகளைப் போட்டு அடுப்பிலேற்றிச் சூடேற்றவும். நீர் கொதி வந்ததும் மெழுகு உருகத்தொடங்கும். அவை முழுதாக உருகும் விதத்தில் மூங்கில் குச்சியால் கிளறிக்கொடுக்கவும்.



* மெழுகு முழுவதும் நீர்ம நிலைக்கு உருகியதும் தேவையான வண்ணம் பெறும் அளவுக்குச் சிலதுளி வண்ண நிறமியினைச் சேர்க்கவும். இதனுடன் வாசனை எண்ணெய் சிறிதளவு மணம் வரும் அளவுக்குச் சேர்த்து நன்கு கலக்கவும்.

* வார்ப்பில் நூல் திரிகளை வைத்து, உருகிய மெழுகினை அதில் ஊற்றவும்.

* சுமார் 5 லிருந்து 6 மணி நேரம் கழிந்து வார்ப்பில் மெழுகு இறுகிய பின்னர் மெழுகுவர்த்தியினைப் பிரித்தெடுக்கலாம்.
தரமான, மணமுள்ள மெழுகுவர்த்தி தயார்!

குறிப்பு:

1. வார்ப்பில் உருக்கிய மெழுகினை ஊற்றும் முன்னர், சிறிய அளவில் வார்ப்பில் எண்ணெய் பூசிய பின்னர் ஊற்றினால், மெழுகு உறைந்த பின்னர் வார்ப்பிலிருந்து மெழுகுவர்த்தியினைப் பிரித்தெடுக்க இலகுவாக இருக்கும்.

2. வார்ப்பில் உருக்கிய மெழுகிய ஊற்றிய பின்னர் ஒரு மணி நேரத்திலும் தேவையெனில் மெழுகுவர்த்தியினைப் பிரித்தெடுக்கலாம். மெழுகு உறைந்துவிட்டது உறுதியான உடன், அதனை அகலமான பாத்திரத்தில் போட்டு முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குளிர்ந்ததும் பிரித்து எடுக்கலாம்.

3. வார்ப்பு கிடைக்காதவர்கள், தேவையான வடிவிலுள்ள சிறிய பாத்திரங்களையும் வார்ப்புகளாகப் பயன்படுத்தலாம்.

4. நூல்திரிகள் மெல்லியவையாக இருந்தால், மெழுகுவர்த்தி எரியும்போது, மெழுகு அதிகம் உருகிவிடாமல் நீண்ட நேரம் மெழுகுவர்த்தி எரிய உதவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...